பக்கம்:அறிவியல் அகராதி.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ele
ele
138

விளக்குகள் இதற்குப் பயன்படுதல். (இய)

electric motor - மின் உந்தி: மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் எந்திரம். (இய)

electric power - மின் திறன்: இது ஒரு மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிக்கும். அலகு வாட். ஓர் ஓல்ட் மின்னழுத்தத்தில் ஒரு கூலும் மின்சாரத்தைச் செலுத்த ஒரு ஜூல் வேலை நடைபெறுகிறது. ஒரு வினாடிக்கு 1 ஜூல் வேலை 1 வாட் ஆகும்.

வாட் = ஓல்ட் X ஆம்பியர்

P = EC P- திறன்

E- மின்னழுத்தம்

C- மின்னோட்டம்

திறன் = வேலை/நேரம் (இய)

electric probe - மிந்துருவி: மின்னனுக்களின் அடர்த்தியை அளக்கும் கருவி. தவிர, இஃது அயனிகள், சுவர் அழுத்தங்கள், மின்னணு வெப்பநிலை, மீ வெப்பநிலையில் தேர்வு மின்னோட்டங்கள் ஆகியவற்றை அளக்கப் பயன்படுவது. (இய)

electric resistance - மின் தடை: கம்பிகளில் மின்னோட்டம் செல்லும்பொழுது அவை ஏற்படுத்தும் தடை கம்பிகளுக்கேற்ப வேறுபடும். கரி சிறந்த தடை. அலகு ஓம். ஓமின் விதிப்படி ஒரு கடத்தியின் இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஓர் ஓல்ட்டும் அதனுள் செலுத்தப்படும் மின்னோட்டம் ஓர் ஆம்பயிரும் என்றால், அதன் மின்தடை ஓர் ஓம்.


மின்தடை = மின்னழுத்தம்/ மின்னோட்டம்

R=E/C (இய)

electric spark - மின்பொறி: ஒரு தடுப்புப்பொருள் வழியாக மின்னிறக்கம் ஏற்படும்போது உண்டாகும் ஒளியும் ஒலியும். (இய)

electric spark plug - மின்பொறிக் கட்டை: மின்பொறியை உண்டாக்க அகக் கனற்சி எந்திரத்தில் இருப்பது. (இய)

electro-analysis, electrolysis - மின்னாற்பகுப்பு: பா. voltmeter. (இய)

electro-cardiogram ECG -இதய மின் வரையம்: இதயத் தசைகள் சுருங்கும் பொழுது மின்வேறுபாடுகளின் ஒளிப்படப்பதிவு. இதய நிலையைக் கண்டறிய எடுக்கப்படுவது. (இய)

electro chemical equivalent - மின்வேதி இணைமாற்று: ஒரு கூலும் மின்சாரத்தை மின்பகுளிக்கரைசல் வழியாகச் செலுத்தும் பொழுது, விடுபடும் தனிமத்தொகுதி அல்லது தனிமக் கிராம்களின் எண்ணிக்கை. அல்லது 1 ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற்