பக்கம்:அறிவியல் அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eli

143

enc


திருக்கும். கடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது. (இய)

ellipse - நீள்வட்டம்: கூம்பகம் (கண)

emasculation - மகரந்த நீக்கம்: பூந்தக நீக்கம். தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க ஒரு பூவில் மகரந்தப்பைகளை நீக்குதல். (உயி)

embryo - வளர்கரு: கருவணுவிலிருந்து உண்டாகும் பலவணுப் பொருள். புதிய கால்வழியை உண்டாக்குவது. பல நுண்ணிய பகுதிகளைக் கொண்டது. (உயி)

embryogeny - கருத்தோற்றம்: விலங்குக் கருவளர்ச்சி நிலைகளை உள்ளடக்கியது. கருவாக்கம் என்று கூறலாம். (உயி)

embryosac - கருவுறை: உறையில் விதையுள்ள தாவரத்தின் பெருஞ்சிதல். இச்சிதலே பின் விதையாவது. (உயி)

emery - தேய்ப்புக்கல்: இயற்கையில் கிடைப்பதும் கடினமானதும் சிலிகான் அற்றதுமான பொருள். சாணை உருளைகளில் பயன்படுவது. (வேதி)

emigration - குடிபெயர்தல்: படிப்பு, தொழில் முதலிய காரணங்களுக்காக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மக்கள் செல்லுதல் (பு.அறி)

eminence - புடைப்பு: ஒர் உறுப்பில் ஏனைய பகுதிகளை விட உயர்ந்து காணப்படும் பகுதி. ஒ. process, prominence.

emissivity - கதிர்வீசுதிறன்: எண். அனைத்தும் சமநிலையில் இருக்கக் கரும்பொருள் ஒன்று வீசும் திறனுக்கு ஒப்பாக ஒரு பரப்பு வீசும் திறன். இதற்கு அலகில்லை. (இய)

emulsification - பால்மமாக்கல்: பா. emulsion. (வேதி)

emulsifier - பால்மமாக்கி: பால்மம் செய்யுங் கருவி. (வேதி)

emulsion - பால்மம்: ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மத்தின் கூழ்மத் துகள்கள் விரவி இருத்தலுக்குப் பால்மம் என்று பெயர். எ-டு. பால் (வேதி)

enamel - பற்சிப்பி: பல்லின் வெண்ணிறப் புறவுறை. பல்லைப் பாதுகாப்பது. (உயி)

enantiotropy - எதிர்வேற்றுருமை: ஒரு தனிமத்தின் வேறுபட்ட நிலைத்த அயல் வேற்றுருக்கள் வேறுபட்ட வெப்பநிலைகளில் அமைந்திருத்தல். எ-டு. கந்தகம் பா. (வேதி)

encephalitis - மூளையழற்சி: மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும். (உயி)

encephalon - மூளை: முதுகெலும்பு விலங்குகளின் சிறந்த உறுப்பு. பா. brain.

encystment - கூடுறைதல்: உயிரியைச் சுற்றித் தோன்றும் கடின உறை. பாதுகாப்பளிப்பது, உயிரிகள் இனப்பெருக்கம் செய்ய