பக்கம்:அறிவியல் அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

end

145

ene


ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழும கரைய மாற்றங்களால் (சால்ஜெல் கன்வெர்ஷன்ஸ்) அமீபா இயக்கம் நடைபெறுகிறது. ஒ. plasmagel. (உயி)

endoplasmic reticulum - அகக் கணிய வலைப்பின்னல்: தட்டையானதும் படலங்களால் வரையறுக்கப்பட்டதுமான தொகுதி. கண்ணறைக் கணியத்தின் வழியாக ஓடுவது. (உயி)

endopleura - அகவுறை: விதையின் உள்ளுறை. (உயி)

endoscopic - அகநோக்கு வளர்ச்சி: தாவர முளைக்கரு வளர்ச்சியில் கருவணுவின் முதல் பிரிவின் போது உண்டாகும் அகவணு உட்கருவாகவும் புறவணு தாங்கியாகவும் வளர்தல். எ-டு. அவரை. ஒ exoscopic. (உயி)

endoskeleton - அகச்சட்டகம்: அகக்கூடு. உடலினுள்ளே அமைந்த சட்டகம். தலை எலும்புக்கூடு. முதுகெலும்பு. புறத்துறுப்பு எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டது.பா. exoskeleton. (உயி)

endosmosis - அகஊடுபரவல்: அரைப்பரவல் படலத்தின் வழியாகக் கரைப்பான் வெளியிலிருந்து உயிரணுவின் உள்ளே செல்லுதல். (உயி)

endosperm - முளைசூழ்தசை: அகச்சூழ்திசை. (உயி)

endospore - அகச்சிதல்: உறையற்றது. சில நீலப்பசும் பாசிகளில் காணப்படுவது. (உயி)

endosulfan - C9H4Cl4O2S எண்டோசல்பன்: மாநிறப்படிகம். நீரில் கரையாது. சைலீனில் கரையும். பூச்சிக்கொல்லி (வேதி)

endotheca - அகமென்னுறை: ஆண்குறி உறையின் உட்சுவர். (உயி)

endothelium - அகமென்படலம்: குருதிக் குழாய்கள், கொழுநீர்க் குழாய்கள் ஆகியவற்றின் புறப்படலக் கரை. (உயி)

endotherm - அகவெப்பநிலை விலங்கு: சிதைமாற்றம் மூலம் தன் உடலினுள்ளேயே வெப்பத்தை உண்டாக்கித் தன்உடல் வெப்பநிலையினை நிலையாக வைத்துக் கொள்ளும் விலங்கு எ-டு. பறவை. (உயி)

endothermic reaction - அக வெப்பவினை: வெப்பம் அல்லது ஆற்றல் தேவைப்படும் வேதி வினை. எ-டு. புரதத் தொகுப்பு. (உயி)

endotoxins - அகநஞ்சுகள்: கண் ணறையில் காணப்படும் நச்சுப் பொருள்கள். பா. exotoxins. (உயி)

endrin - C6H8Cl6O எண்ட்ரின்: மிக நச்சுள்ள அய்டிரோ கார்பன். பூச்சிக்கொல்லிகளில் ஒன்று. நீரில் கரையாதது. ஆல்ககாலில் சிறிது கரையும். (வேதி)

energy - ஆற்றல்: ஒரு தொகுதியின் பண்பும் அதன் வேலை செய்யும் கொள்திறனுமாகும்.

அஅ10