பக்கம்:அறிவியல் அகராதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



fab

157

fal



F

fabrication - கட்டுமானம்: ஆக்குதல்

fabrication temperature - ஆக்கு வெப்பநிலை. (தொ.நு)

fabrication tolerence - ஆக்கு தாங்குநிலை: (தொ.நு)

face - முகம்: தலையின் முன் பகுதி இதில் நெற்றி, காது, கண்கள், முக்கு, வாய், தாடை ஆகிய பகுதிகள் உள்ளன. முக நரம்புகளில் உண்டாகும் நரம்புவலிக்கு முகவலி (பேஸ் ஏக்) என்று பெயர்.முகப்பு

face-lifting - முகப்பு உயர்வு: முகப்பை உறுதியாக்கும் செயல். பழைய கட்டிடங்களின் முகப்பைத் திருத்தி அமைப்பது. (தொ.நு)

facet - நுண்முகம்: பூச்சிகளின் கூட்டுக்கண்களிலுள்ள விழிப்படலத்தின் சிறிய பகுதி (உயி)

facials - முகநரம்பு: முதுகெலும்பிகளின் 7ஆம் மூளை நரம்பு. இதில் உணரிழைகளும் இயக்க விழைகளும் உள்ளன. (உயி)

factor - 1. காரணி: மரபுப் பண்புடையது. நிறப்புரியில் உள்ளது. 2. மாறிலி. எ-டு. சுருக்கக் கூற்றெண். 3. ஒரு நிகழ்வு அல்லது தன்மைக்கு காரணமான பொருள். எ-டு. சூழ்நிலைக் காரணிகள், வேதிக் காரணிகள், 4. ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தல். (வகுத்தி) (ப.து)

Fahrenheit scale - பாரன்கெயிட் அளவு: வெப்பநிலை அளவுகளில் ஒன்று. நீரின் உறை நிலை 32° கொதிநிலை 212° 1714இல் ஜெர்மன் அறிவியலார் பாரன் கெயிட் (1686- 1736) என்பார் அமைத்தது.

FACTS - பேக்ட்ஸ்: (பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரைவு, துல்லியம், நம்புமை ஆகிய மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டவை. (இய)

FAD, flavin adenine dinucleotide - ஃபேடு, பிளேவின் அடினைன் இரு நியூக்ளியோடைடு: துணைநொதி, ரிபோபிளேவின் பாஸ்பேட்டு அடினிலிகக் காடிக் குறுக்கத்தினால் உண்டாவது. (உயி)

faeces - எச்சம்: விலங்குகள் வெளியேற்றும் உணவுப் பொருட்கழிவு. (உயி)

fallopian tube - பெலோப்பியன் குழல்: இத்தாலிய உள்ளமைப்பியலார் கேப்ரியல் பெலோப்பியா (1523-62) என்பவர் பெயரால் அமைந்தது. 7.5 செமீ நீளமுள்ளது. சூல்பையிலிருந்து கருப்பைக்குள் செல்வது. (உயி)