பக்கம்:அறிவியல் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ada

14

ade


வற்றில் இருக்கலாம். விலங்குகள் தங்கள் பகைவரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வமைப்பு பயன்படுகிறது. இது பல வகைப்படும். 1. பாதுகாப்பு நிறம்: வெட்டுக் கிளி 2. தாக்கு நிறம்: பச்சைப் பாம்பு 3. எச்சரிக்கை நிறம்: விரியன் 4. நிறமாற்றம்: பச்சோந்தி (உயி)

adaxial - அச்சு நோக்கிய: இலை மேற்பரப்பு. அதாவது பக்கம் தண்டு நோக்கி அமைதல் இலை முதலிய பக்க உறுப்புகளில் இச்சொல் மேற்புறம் (டார்சல்) எனப் பொருள்படும். ஒ. abaxial. (உயி)

adder - விரியன்: சிறிய நச்சுத் தன்மையுள்ள பாம்பு. (உயி) கூட்டி: கூட்டுங் கருவி. (கண)

addition - reaction - கூட்டு வினை: எத்திலின், அசெட்டலின் ஆகிய வளிகள் புரோமின் கரைசலுடன் வினையாற்றி அக்கரைசலை நிறமற்றதாக்கும். (வேதி)

address - 1. முகவரிகாண்: கணிப் பொறி நினைவகத்தில் சேமிப்பு இடத்தை அடையாளங் கண்டறிதல். 2. முகவரிகாணி: வழக்கமாக இரு நிலைக் குறிபாட்டிலுள்ள எண். குறிப்பிட் இடத்தை இனங் காண்பது. கணிப்பொறி நினைவகத்தில் இவ்விடத்தில் செய்திகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். (கணி)

adductor - மடக்குதசை: முன் கையை மடக்கப் பயன்படும் இருதலைத் தசை. பா. abductor. (உயி)

adenine - அடினைன்: பியூரைன் வழிப் பொருள். டி.என்.ஏவிலும், ஆர்என்ஏவிலும் பெரும் காரப் பகுதிப் பொருள்களில் ஒன்றாக இருப்பது. (வேதி)

adenoids - மூக்கடிச்சதை: மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்குப் பின் காணப்படும் கொழுநீர்ச் சுரப்பிகள். இவை பருக்கும் போது கேட்டலும், முச்சுவிடுதலும் கடினமாக இருக்கும். (உயி)

adenosine - அடினோசைன்: டிரிபாஸ் சர்க்கரை மூலக்கூறு டன் சேர்ந்துள்ள ஓர் அடினைன் மூலக்கூறு கொண்ட நியூக்ளியோசைடு, இதன் பாஸ்பேட் எஸ்தர் வழிப் பொருள்களாவன. அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட், அடினோசைன் இரட்டைப் பாஸ், பேட் அடினோ சைன் முப்பாஸ்பேட். இம் மூன்றும் வேதியாற்றலைச் சுமந்து செல்வதால் அடிப்படை உயிரியல் சிறப்புடையவை. (உயி)

adenosine diphosphate, ADP - அடினோசைன் இரட்டைப் பாஸ்பேட் எடிபி: பா. adenosine. (வேதி)

adenosine monophosphate, AMT - அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட் ஏஎம்டி: பா. adenosine. (வேதி)

adenosine triphosphate, ATP . அடினோசைன் முப்பாஸ்பேட் எடிபி: பா. adenosine. (வேதி)

adenotrophic viviparity - உள்ளுறை வளர்ச்சி: சில ஈக்களில்