பக்கம்:அறிவியல் அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



fib

162

fil


உணர்விகள்: ஆற்றல் நிலையங்களில் துல்லியத்தை உயர்த்திப் பேணும் செலவுகளைக் குறைப்பவை. (தொ.நு)

fibril - நுண்ணிழை: நூலிழை போன்றது. உயிரணுவினால் உண்டாக்கப்படுவது. (உயி)

fibrillar muscles - நுண் இழைத்தசைகள்: பூச்சி அசைந்து பறப்பதற்குரிய தசைகள். (உயி)

fibrin - பைபிரின்: முதுகெலும்பிகளின் குருதி உறையும் போது, வலைப்பின்னல் இழைகளாக வீழ்படியுங் கரையாப்புரதம். திராம்பினுடன் சேர்ந்து பைபிரினை உண்டாக்குதல். (உயி)

fibroblast - நார்க்கண்ணறை: இணைப்புத் திசுக் கண்ணறை. குருத்தெலும்புக் கண்ணறை (கான்ட்ரோபிளாஸ்ட்) கொல்லேஜன் கண்ணறை (கொல்லேஜன் பிளாஸ்ட்) எலும்புக் கண்ணறை (ஆஸ்டியோ பிளாஸ்ட்) என்னும் மூன்று வகைக் கண்ணறைகளாக வேறுபட்டுள்ளது. (உயி)

fibula - முழங்கால்வெளி எலும்பு: இரு முழங்கால் எலும்புகளில் ஒன்று. முழங்காற் சில்லிலிருந்து கணுக்கால்வரை நீண்டிருப்பது. (உயி)

field - புலம்: ஒரு பொருள் விசையை நுகரும் பகுதி. எ-டு. மின்புலம், காந்தப்புலம். (இய)

field coil - புலச்சுருள்: காந்தப்புலத்தை உண்டாக்கும் கம்பிச்சுருள். எந்திரத்திலுள்ளது.

filament - இழை: 1. மகரந்த இழை (உயி) 2. மின்விளக்கு இழை. (இய)

filariasis - நூற்புழுநோய், யானைக் கால் நோய்: வட்டப்புழுவினால் உண்டாகும் ஒட்டுண்ணி நோய். பெண் கொசுக்களால் பரப்பப்படுவது. இவை இழைப்புழுவிற்கு இடைப்பட்ட ஒம்புயிரிகளாக இருப்பவை. கடுங்காய்ச்சல், கொழுப்பு அழற்சி, கொழுப்பு முண்டுகள், வீங்கல் இதன் அறிகுறிகள். (உயி)

file - கோப்பு: கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு. (இய)

filler - நிரப்பி: இது ஒரு திண்மப் பொருள். இயற்பண்பை மாற்றவல்லது. ரப்பர், பிளாஸ்டிக் முதலியவற்றோடு சேர்க்கப்படுவது. கண்ணாடி இழை, பருத்திக் கம்பளம், காக்கைப் பொன் முதலியவை நிரப்பிகள். (வேதி)

filter - வடிகட்டி: ஒரு நீர்மத்திலுள்ள மாகடை தொங்கு பொருள்களைப் பிரிக்கப் பயன்படுங் கருவி. (இய)

filter feeding - வடிகட்டி உணவு கொள்ளல்: நீரில் வாழும் விலங்குகள் உணவு கொள்ளும் முறைகளுள் ஒன்று. திமிங்கலம். பா. ciliary feeding. (உயி)

filtrate - வடிபொருள்: வடிகட்டல் மூலம் பெறப்படுவது. இதில் தொங்கு பொருள் இல்லை.