பக்கம்:அறிவியல் அகராதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fil

163

fis


கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று வடிகட்டல், உப்புக் கரைசலை வடிதாள் வழியாகச் செலுத்தத் தாளின் மேல் உப்பும் முகவையில் வடிபொருளும் (நீரும்) கிடைக்கும். (வேதி)

filtration - வடிகட்டல்: கலவையைப் பிரிக்கும் முறைகளுள் ஒன்று. வடிதாள். உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள். (வேதி)

finray - துடுப்பாரம்: கடின எலும்புமுள் குருத்தெலும்பு. எலும்பு அல்லது கொல்லேஜனாலானது. நீர் வாழ்விகளில் துடுப்பிற்குத் தாங்குதல் அளிப்பது. (உயி)

fire damp - தீவளி: மீத்தேனும் காற்றும் சேர்ந்த வெடிகலவை. நிலக்கரிச் சுரங்கங்களில் உண்டாவது. (வேதி)

fire extinguisher - தீயணைப்பான்: தீயை அணைக்க வேதிப் பொருளைப் பீச்சும் கருவியமைப்பு. பீச்சுபொருள் கரி ஈராக்சைடு நுரையாக இருக்கும். (வேதி)

firefly - மின்மினி: இரவில் ஒளி உமிழும் விட்டில். 6,7 ஆகிய வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் அமைந்துள்ளன. இங்கு லூசிபெரின் என்னும் வேதிப் பொருள் லூசிபெரஸ் என்னும் நொதியினால் உயிர்வளி ஏற்றம் பெற்று, நிற ஒளிர்வு உண்டாகிறது. (உயி)

firstaid - முதலுதவி: சிறு விபத்தின் பொழுது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் ஒருவருக்குச் செய்யவேண்டிய உதவி. மண்டை உடைந்து குருதி வடிந்தால், கருதியை துடைத்து விட்டு அவ்விடத்தில் பஞ்சை வைத்து அயோடின் கரைசலைத் தடவிப் பின் மருத்துவமனைக்கு அனுப்பலாம். பள்ளிகளில் சாரணர், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் ஆகியோருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்படுகிறது. மருத்துவர்களிடமும் முதலுதவி பயிற்சி பெறலாம். (உயி)

fish - மீன் உடல் வெப்பநிலை மாறும் நீர்வாழ்வி. செவுள்களால் மூச்சு விடுவது. துடுப்புகளால் நீந்துவது. உடல் முழுதும் செதில்கள் பரவி இருக்கும். பரந்து பலவகைகளாக உள்ளது. பெரும் பொருளாதாரச் சிறப்புடையது. (உயி)

fission - பிளவு, பிளவுபடல்: 1. இனப்பெருக்கத்தினால் ஓர் உயிரி சம பகுதியாக இரண்டாக பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளவுயிர்களாதல். எ-டு. அமீபா 2. அல்லணுக்களைக் குண்டுகளாகப் பயன்படுத்தி அணுக்கருவைப் பிளந்து, ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அணுப்பிளவு அல்லது அணுக் கருப்பிளவு என்று பெயர். இந்நெறிமுறையின் அடிப்படையில் அணுக்குண்டு செய்