பக்கம்:அறிவியல் அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flo

165

flu


அந்நீர்மத்தில் மிதக்கும். 2. ஒரு பொருள் ஒரு நீர்மத்தில் மிதக்கும் போது, மிதக்கும் பொருளின் நிறை, அதனால் விலக்கப்பட்ட நீர்மத்தின் நிறைக்குச் சமம். இதனடிப்படையில் கப்பலும் நீர் மூழ்கிக் கப்பலும் இயங்குதல். தவிர, நீர்மமானி, பால்மானி ஆகியவையும் இவ்விதியின் அடிப்படையில் அமைந்தவையே. (இய)

floppydisk - நெகிழ்தட்டு: பிளாஸ்டிக்காலான நெகிழ்தட்டு. இதில் காந்தப்படலம் போர்த்தப்பட்டிருக்கும். இப்படலத்தில் எண் வடிவத்தில் கணிப்பொறிச் செய்திக் கூறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடினத்தட்டுகளை விட விலை குறைவானவை. ஆனால், நம்புமை குறைவு. பா. hard disk. (இய)

flora - திணைத்தாவரம்: மரவடை குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழுந் தாவரங்கள். எ.டு. நீர்வாழிகள், வறண்ட நில வாழிகள்.

floral diagram - பூப்படம்: ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறிவதற்குப் பயன்படுவது. இப்படம் தாயச்சிற்குச் சார்பான நிலையில் ஒரு பூவின் பலபகுதிகளின் அமைப்புமுறையைத் திட்டமாகக் காட்டுவது. வகைப் பாட்டியலில் சிறந்த இடத்தைப் பெறுவது. (உயி)

flori culture - பூத்தாவர வளர்ப்பு : பூக்குத் தாவரங்களை வளர்க்குங் கலை, எ-டு. ரோஜா வளர்த்தல்.(உயி)

flowchart, diagram - வழிவரை படம்: இஃது ஒரு விளக்கப் படம். அம்புக் குறிகளால் இணைக்கப் பெற்ற குறிகளைப் பயன்படுத்து வது குறிப்பிட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய செயல் ஒழுங்கைக் காட்டுவது. பா. algorithm.

flower - பூ: தாவரத்தின் உரு மாறிய தண்டகம். (தண்டு + இலை). இனப்பெருக்க உறுப்பு. நான்கு வட்டங்களைக் கொண்டது. பசுமையான புல்லிவிட்டம், நிறமுள்ள அல்லிவிட்டம், மகரந்தம் (ஆண்பகுதி), சூலகம் (பெண்பகுதி). (உயி)

flower parts, arrangement of - பூப்பகுதி அமைவு: 1. சுழலமைவு. பூவரசு 2. அரைச்சுழலமைவு. அனோனா. 3. சுருளமைவு. கள்ளி (உயி)

fluidisation - பாய்மமாக்கல்: பாய்மம் = நீர்மம் + வளி. இது தொழிற்சாலை வேதிநுணுக்கம். இதில் திண்மத்துகள் தொகுதி, தொங்கல் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கு உலையில் அதன்வழியே மேல்நோக்கி வழிசெலுத்தப்படுகிறது. (வேதி)

fluorescein - ஃபுளோரோஸின்: C20H12O5. கறுப்பு செந்நிறக் கரிமச்சேர்மம். காரக் கரைசல்களில் கரைந்து, செறிவான பசிய ஒளிர்வைத் தரும் நீர்மத்தை அளித்தல். சாயங்களில் நிலைக்காட்டி (இன்டிகேட்டர்). இதனை ஒளிரி