பக்கம்:அறிவியல் அகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gen

180

geo

கமுமாகும். தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் கரைசல்களுக்கு அவற்றை மாற்றுவதும் இந்நுட்பத்தில் அடங்கும். வேறு உயிரிகளுக்கு மாற்றப்படும்வரை, அவை வளர்ப்புக் கரைசலிலேயே பெருகும். புற்றுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும் புதிய எதிர்ப்புப் பொருள்கள் உண்டாக்கவும் பயன்படுவது. இத்துறை வளர்ச்சியில் அதிக நாட்டம் செலுத்தியவர்கள் இங்கிலாந்து அறிவியலாராவர். அடுத்து அமெரிக்க அறிவியலாரும் இதில் அக்கறை காட்டி வருகின்றனர். இதற்கு வேறு பெயர் மீள்சேர்ப்பு டிஎன்ஏ தொழில் துணுக்கம் என்பதாகும். (உயி) பா. Cloning.

genetic equilibrium - மரபணு நடுநிலை: ஒர் உயிர்த்தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலை முறைகள், குறிப்பிட்ட மரபணுக் களைப் பொறுத்தவரை, ஒரே மரபு முத்திரயினை (ஜெனோடைப்) ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருத்தல். (உயி)

genetics - மரபணுவியல், மரபியல்: உயிரின் மரபுவழி, வளர்ச்சி, வேறுபாடு, மலர்ச்சி ஆகியவை பற்றி ஆராயுந்துறை. (உயி)

genitals , பிறப்புறுப்புகள்: இனப்பெருக்க உறுப்புகள். அதாவது, ஆண், பெண்ணுக்கென்று அமைந்த தனிப் பாலுறுப்புகள். (உயி)

genome - மரபணுத் தொகுதி: ஒர் உயிரியில் அமைந்துள்ள நிறப்புரிகளின் நிறைத்தொகுதி (உயி)

genotype - மரபுமுத்திரை: ஒரே மரபணு அமைப்பை உடைய வகை. இன மாதிரி (டைப் ஸ்பீசிஷ்) என்று அறுதியிடப்பட்டது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப் பட்டிருக்கும். ஒ. Phenotype. (உயி)

genus - பேரினம்: தொகையினம். வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. சிறப்பினத்திற்கும் குடும்பத்திற்கு இடையிலுள்ளது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப்பட்டிருக்கும். species. (உயி)

geocentric universe - புவிமைய விண்ணகம்: புவியை மையமாகக் கொண்ட உலகம் என்னும் பழைய கருத்து. (பு.அறி)

geochemistry - புவிவேதி இயல்: புவி அறிவியல். புவியின் வேதி இயைபை ஆராய்வது. (பு.அறி)

geodesy - புவிவடிவ இயல்: புவி உருவியல், புவிமேற்பரப்பைப் படமாக்குதல், அளவை செய்தல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. புவி அறிவியல் சார்ந்தது. இதனால் அதன் வடிவம், அளவு, ஈர்ப்புப்புலம் ஆகியவற்றை உறுதி செய்ய இயலும், (பு. அறி).