பக்கம்:அறிவியல் அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gra

186

gra


தனை மடங்கு கனமாக உள்ள தோ, அந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடையாகும். மூலக்கூறு எடை= பொருளின் மூலக்கூறு ஒன்றின் எடை நீர்வளி அணு ஒன்றின் எடை (வேதி)

gram negative - கிராம் எதிர்க் குச்சியம்: கிராம்கறையோடு சேர்க்கும்போது எதிர்க்கறை யோடு சேர்ந்து நிறமற்றதாகும் குச்சியம். (உயி)

gram positive -கிராம் நேர்க் குச்சியம்: செந்நிற எதிர்க்கறை யாலும், நிறம் நீக்கியாலும் பாதிக்கப்படாமல், ஊதா நிறக் கறையை நிலைக்க வைத்திருக் கும் குச்சியம்.

gram weight -கிராம் எடை : அலகுச் சொல். விசையலகு ஒரு கிராம் பொருண்மையுள்ள பொருளின் மீது செயற்படும் நில ஈர்ப்புவிசை. 1 கிராம் எடை = டைன்கள். மதிப்பு மாறுவது. (இய)

granite - கிரானைட்டு: நேர்த்தி யிலா எரிமலைப் படிகப்பாறை. இதில் படிகக்கல். காக்கைப் பொன், கனிமம் (பெல்ஸ்பார்) ஆகியவை அடங்கியுள்ளன. (வேதி)

granulocytes -வெளிரணுக்கள், துணுக்கணுக்கள்: குருதி வெள் ளணுக்கள். இவற்றில் துணுக்கு அணுக்கணியம் உள்ளது. உடலுக்குப் பாதுகாப்பளிப்பவை எதிர்ப்பாற்றலை உண்டாக்கு பவை (உயி)

granum - துணுக்கம்: பசுங்கணிகத்திலுள்ள படலத் தொகுப்பு. இது நுண்ணோக்கியில் மணியாகத் தெரிவது. (உயி)

graphics -வரைகலை: படப்பொறிப்பு கணிப்பொறிக்காட்சித் திரையில் தோன்றும் படச் செய்தி. இய)

graphics characters-வரைகலை வடிவங்கள்: எழுத்து, எண் போன்றே காட்சித் திரையில் இடத்தை அடைத்துக் கொள்ளும் சிறிய வடிவங்கள். கணிப் பொறி விளையாட்டுகளில் பயன்படுபவை. (இய)

graphite - கிராபைட்டு: கரியின் வேற்றுரு. அறுகோண வடிவ முள்ள படிகம். மின்சாரத்தையும் வெப்பத்தையும் எளிதில் கடத்தும், உயவிடுபொருள். மின் வாய்கள் செய்ய (இய)

grasshopper - புல்வெட்டுக்கிளி: தாவிச் செல்லும் நேர்ச் சிறகுடைய பூச்சி. வெட்டுக் கிளியோடு தொடர்புடையது. வெட்டும் வாய்ப்பகுதிகள், தடித்த முன்சிறகுகள் உண்டு. சிறகுகள் படலப்பின் கால்களை மூடுபவை. (இய)

gravimeter - எடையறிமானி: நீரில் அளவுகள் எடுக்கவும் நீரிலுள்ள எண்ணெய்ப் படிவுகளை உறுதி செய்யுவம் பயன்படும் நீர்மானி. (வேதி)