பக்கம்:அறிவியல் அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gum

189

gyr


gum - பிசின்: கோந்து. தாவரப் பொருள். மாப்பொருள் ஊட்டம் உள்ளது. (உயி)

gummosis. பிசின் ஒழுக்கு:தாவர நோய், அதிகமாகப் பிசின் ஒழுகி மரப்பட்டையில் சேர்வது. கருவேலில் காணலாம். (உயி)

gun Cotton -வெடி பஞ்சு:நைட் ரிகக் காடியையும் கந்தகக்காடி யையும் பஞ்சில் சேர்த்துச் செய்யப் படுவது. (வேதி)

gun metal-வெடிகுழல் உலோகம்: செம்பும் வெள்ளியமும் (9:1) துத்தநாகமும் (4%) சேர்ந்த கலவை. வெடிகுழல்கள் செய்ய. (வேதி)

gun powder - வெடி தூள்:வீட்டுக் கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட்டு சேர்ந்த வெடி கலவை. (வேதி)

gutta- உறைபால்: மரத்தில் உறைகின்ற பால். (உயி)

guttation - திவலை படிதல்: 1.வேர ழுத்தம் காரணமாக இலைகளில் திவலைகள் தோன்றல், 2. தாவர மேற்பரப்பிலிருந்து நீர் இழப்பு ஏற்படுதல் (உயி)

gymnospermae - உறையில் விதையில் தாவரங்கள்: பூக்குந் தாவரங்கள். விதையுள்ள தாவரங் களின் ஒரு துணைப்பிரிவு. (உயி)

gynaecology - மகளிர் நோய் இயல்: பெண்கள் நோய்கள் பற்றி ஆராயுந்துறை. (மரு)

gynobasic style-அடிச்சூழ் தண்டு: சூல்பைச் சூல்களின் அடியிலிருந்து உண்டாகும் சூல்தண்டு. (உயி)

gymoecium - சூல்வட்டம்: பூவின் நான்காம் வட்டம். இது பெண் பகுதி, சூல்பை குல்தண்டு, சூல் முடி ஆகியவற்றைக் கொண்டது. இதிலிருந்து உண்டாகும் சூல் முதிர்கின்ற பொழுது விதை உண்டாகிறது. சூல்பை முதிர் கின்ற பொழுது, அது காய் அல்லது பழமாகிறது. ஒ. (உயி)

gypsum - ஜிப்சம்: (CaSO4). கால்சியம் சல்பேட் வெண்ணிறப் பொருள். இதிலிருந்து நீர் நீக்கப் படும்பொழுது பிளாஸ்டர் ஆஃப் பேரிஸ் ஆகின்றது. வனை பொருள் தொழில், வண்ணஞ் செய்தல், தாள் செய்தல் முதலிய தொழில்களில் பயன்படுதல். எலும்பு முறிவுக்கட்டு போடவும் பயன்படுதல், (வேதி)

gynophore - பூத்தாங்கி: சூலகத் திற்கும் மகரந்தத்திற்குமிடையே பூத்தளம் நீண்டு சூல்பையினைத் தாங்குதல் (உயி)

gyrocompass - சுழல் கவராயம்: அமெரிக்க எல்மர் பெரி இதனை 1911இல் புனைந்தார். காந்தம் இதில் பயன்படாததால், காந்தப் புயல்களால் இது தாக்குறு வதில்லை. (இய)

gyromagnetic ratio -சுழல்காந்த வீதம்: ஒர் அணுவின் காந்தத் திருப்புத் திறனுக்கும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள வீதம். (இய)