பக்கம்:அறிவியல் அகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hai

191

hal


கல்மழை என்று பெயர். மழைக் கல்பட்டாணி அளவுக்கு இருக்கும். (புஅறி)

hair - மயிர்: 1. பாலூட்டிகளின் மேல்தோல் வளர்ச்சி, 2. தாவர புறத்தோலின் வளர்ச்சி. (உயி)

hair follicle- மயிர்க்கால் குழாய் போன்ற பை. அகத்தோலில் புறத்தோல் அணுக்களின் உள் வளர்ச்சியால் உண்டாவது. மயிரின் வேரை முடியிருப்பது. (உயி)

half life period - அரைவாழ்வுக் காலம்: ஒரு மாதிரியிலுள்ள கதிரியக்க ஒரிமத்தின் செம்பாதி சிதைய ஆகுங்காலம். (வேதி)

halfnium - ஆஃப்னியம்:Hf. வெண்ணிற உலோகம். காற்றில் எரிந்து ஆஃப்னிய ஆக்சைடைக் கொடுக்கும். அறுவையிலும் கம்பியிலாத் திறப்பிகள் செய்வதிலும் பயன்படுவது. (வேதி)

halide- ஏலைடு: உப்பிலுள்ள ஒரு கூட்டுப் பொருள். இது புரோமைடு, குளோரைடு, புளோரைடு, அயோடைடு என நான்கு வகைப்படும். (வேதி)

halite - ஏலைட்: பாறையுப்பு. இயற்கையில் கிடைக்கும் சோடியம் குளோரைடு (வேதி)

Halley's comet - ஏலி வால்மீன்: 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது. 1986இல் கடைசியாகத் தோன்றியது. இதன் சுற்று வழியை ஏலி (1656 1742) 1705இல் கணக்கிட்டார். ஆகவே, இது அவர் பெயர் தாங்குவது. கோள்களுக்கு எதிர்த்திசையில் கதிரவனைச் சுற்றி இயங்குவது. (வானி)

hallucination - இல்பொருள் தோற்றம்: வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல்களிலிருந்து எழுந்தோற்றம் அல்லது காட்சி. இதை நுகர்வோர் உண்மை என்று எண்ணி நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள். (உயி)

hallucinogen - இல்பொருள் தோற்றி: மனமயக்கத்தை உண்டாக்கும் மருந்து. (மரு)

hallux - கால்முதல்விரல்: சில பறவைகளிலும் பாலூட்டிகளிலும் காணப்படுவது. ஆனால், முயலில் இல்லை. (உயி)

halo - ஒளிவட்டம்: திங்கள் அல்லது கதிரவனைச் சுற்றியுள்ள ஒளி வளையம், காற்று வெளிப் பனிக்கட்டிப் படிகங்கள் ஒளிமறிப்பு ஏற்படுத்துவதால் உண்டாவது (இய)

halobiont - உப்பிடவாழ்வி: உப்பு நீரில் வாழ்கின்ற தாவரம். அதாவது, சதுப்பு நிலத்தாவரம். எ-டு, அவிசீனியா. பா. halophyte. (உயி)

halo effect - அல்விளைவு: ஒரு குறிப்பிட்ட ஆளுமைப் பண்பில் ஒருவரது நிலையறிதல் அறிந்து பின் அதனுடன் தொடர்பற்ற பிற பண்புகளிலும் அவர் அதே நிலையில் இருப்பார் எனத் தவறான முடிவுக்கு வருதல். (உயி)