பக்கம்:அறிவியல் அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hea

194

hea


அல்லது ஜூல். எ-டு 1000 கலோரி வெப்பம். இயல்பான நிலையில் நம் உடல் வேலை செய்ய 3,000 கலோரி வெப்பம் தேவை. (இய)

heat capacity - வெப்பேற்புத்திறன்: ஒரு பொருள் முழுவதை யும் 1 செ.க்கு உயர்த்துவதற்கு வேண்டிய வெப்பத்தின் அளவு. T=ms கலோரிகள் (T- வெப்ப ஏற்புத்திறன், m- பொருண்மை. s-வெப்ப எண்). (இய)

heat exchanger - வெப்பமாற்றி: பாய்மங்கள் ஒன்றோடு மற்றொன்று கலவாமல், அவை ஒவ்வொன்றிற்கும் வெப்பம் செலுத்துங் கருவி. (இய)

heat flux- வெப்ப ஓட்டம், பாயம்: ஓரலகு நேரத்தில ஓரலகு பரப்பில் இடமாற்றம் பெறும் வெப்பம், இய)

heat of adsorption - வெளிக்கவரல் வெப்பம்: நிலையான அழுத்தத்தில், ஒரு மோல் அளவுள்ள பொருள் மற்றொன்றின் மீது வெளிக்கவரப்படும் பொழுது, உள்ளீட்டு வெப்பத்தால் உண்டாகும் உயர்வு. வெளிக்கவரல் வெப்பத்தைப் பரப்பூன்று வெப்பம் என்றுங் கூறலாம் (இய)

heat of atomization - அணுவாதல் வெப்பம்: ஒரு மோல் அளவுள்ள பொருளை அணுக்களாகச் சிதைக்கத் தேவையான வெப்பம். இய)

heat of combustion - கனற்சி வெப்பம்: மிகு உயிர்வளியில் ஒரு மோல் அளவுள்ள பொருளை எரிக்க உண்டாகும் வெப்பளவு. (இய)

heat of crystallization - படிகமாதல் வெப்பம்: தன் உறைநிலையில் நீர்மத் தொகுதி படிகமாகும் பொழுது உண்டாகும் வெப்ப அளவு. (இய)

heat of dilution - நீர்த்தல் வெப்பம்: நிலையான வெப்பநிலையில் குறிப்பிட்ட அளவு கரைப் பானைச் சேர்க்க உண்டாகும் உள்ளிட்டு வெப்ப உயர்வு. (இய)

heat of disassociation - பிரிகைவெப்பம்: நிலையான அழுத்தத்தில் இணைதிறன் பிணைப்பு விடுபடும் போது அல்லது மூலக்கூறுகள் தெறிக்கும்போது ஏற்படும் உள்ளீட்டு வெப்ப உயர்வு. (இய)

heat of formation - தோன்றுதல் வெப்பம்: நிலையான வெப்ப நிலையில், ஒரு மோல் அளவுள்ள பொருள். தன் தனிமங்களிலிருந்து உருவாகத் தேவையான வெப்பம். (இய)

heat of fusion - உருகுதல் வெப்பம்: உருகுநிலையில், ஓரலகு பொருள் திணிவுள்ள தனிமத்தை நீர்மமாக்கத் தேவையான கலோரிகளின் எண்ணிக்கை. (இய)

heat, latent - உள்ளுறை வெப்பம்: 1. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும்