பக்கம்:அறிவியல் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

air

18

ale


நீர்க் கொள்ளல் பா. disease. (மரு)

air - காற்று: புவியைச் சூழ்ந்துள்ள வளிக் கலவை. வளிகளைத் தவிர நீராவி, அய்டிரோகார்பன்கள், அய்டிரஜன் பெராச்சைடு, கந்தகச் சேர்மங்கள், சிறிய புழுதித் துகள்கள் ஆகியவையும் இதில் உள்ளன. (இய)

air conditioning, AC - காற்றைத் தட்பமாக்கல்: இதில் காற்றின் வெப்ப நிலை மட்டுப்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட மூன்று செயல்களைக் குறிக்கும். 1. காற்றை வெளுத்தல் 2. ஈரப்பதமாக்குதல் 3. ஈரத்தை நீக்குதல். (தொ.து)

air sacs - காற்று விரிபைகள்: இவை பறவைகளுக்கே உரியவை. நுரையீரல்களின் நீட்சிகள். மார்புப் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் அமைந்திருப்பவை. பறவை மூச்சுவிட உதவுபவை. (உயி)

alabaster - அலபாஸ்டன்: CaSO4 2H2O. நீரமை நிலையிலுள்ள கால்சியம் சல்பேட்டின் (ஜிப்சம்) இயல்பான ஒளிபுகா வடிவம். (வேதி)

albedo - ஒளி எண்: ஒரு பரப்பிலிருந்து மறிக்கப்படும் ஒளியின் அளவுக்கும் படுஒளியின் அளவுக்குமுள்ள வீதம். வியாழனின் ஒளி எண் 0.44. (இய)

albinism - வெண்ணியம்: ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா. (உயிர்)

albumin(en) - ஆல்புமின்: கோளப் புரதத் தொகுதியில் ஒன்று. நீரில் கரையும் வெப்பப்படுத்தக் கரையா உறைபொருளாகும். இது முட்டை வெள்ளை, குருதி, பால் முதலியவற்றில் உள்ளது. (உயி)

alcohol - சாராயம்: C2H5OH கரைமம். ஈத்தேனிலிருந்து பெறப் படுவது. கற்பூரம் முதலியவற்றைக் கரைக்கும். விளக்கெரி பொருளாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. (வேதி)

aldicarb - ஆல்டிகார்ப்: C7H14N2O2S. இப்பொருள் வெண்ணிறப் படிகம். பூச்சிக் கொல்லி. (வேதி)

aldol reaction - ஆல்டால் வினை: இதில் ஒர் ஆல்டிகைடின் இரு மூலக்கூறுகள் எரிசோடா முன்னிலையில் சேர்ந்து ஒர் ஆல்டாலைக் கொடுக்கும். அதாவது ஆல்டிகைடு ஆல்ககால் வினைபடு தொகுதி ஆகியவற்றை ஒரு சேர்மம் கொண்டிருக்கும். (வேதி)

aldrin - ஆல்ட்ரின்: C12H8Cl2ஜெர்மன் வேதியிலார் குர்ட் ஆல்டர் என்பவர் பெயரால் அமைத்த வேதிப்பொருள். கரையான் கொல்லி. (வேதி)

aleuroplast - மாக்கணிகம்: புரதத்தைச் சேர்க்கும் நிறமற்ற கணிகம். (உயி)

alexin - அலெக்சின்: நச்சு முறிவு. குருதித் தெளியத்தில் (சீரம்) இருப்பது. எதிர்த்தெளியத்தோடு சேரும் பொழுது நோய்க்கெதிராகப் பாதுகாப்பளிப்பது. (உயி)