பக்கம்:அறிவியல் அகராதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hig

200

hol


எஃகு: உயிர்விரைவு கடைசல் எந்திரங்களில் கருவிகளை வெட்டப் பயன்படும் எஃகு. (வேதி)

high tension - உயரழுத்தம்: உயர்மின்னழுத்த வேறுபாடு. பலநூறு ஒல்ட்டுகளுக்கு மேல். (இய)

hilum - தழும்பு: 1. விதையுறையிலுள்ளது. காம்புடன் விதை தான் முன்பு இணைந்திருந்த இடத்தைக் குறிப்பது. 2. ஒர் உறுப்பிலுள்ள குழிவு. இங்குக் குழாய்கள், குழல்கள் முதலியவை சென்று வெளியேறுகின்றன. (உயி)

Hill reaction -ஹில்வினை: ஒளிச்சேர்க்கைத் தொடர்பாக 1937இல் இராபர்ட் ஹில் என்பார் முதன் முதலில் விளக்கிக் காட்டிய ஆய்வு. முதலில் நடைபெறுவது ஒளிச்செயலாகும். இதைத் தொடர்வது இருட்செயல் அல்லது வினை. பா. Calvin cycle, dark reaction. (உயி)

hippopotamus - நீர்யானை: பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி தாவர உண்ணி, நீரில் கிடப்பது ஆப்பிரிக்காவில வாழ்வது. ஒரே அளவுள்ள கால்கள். விலங்கு காட்சிச் சாலைகளிலும் வளர்க்கப்படுவது. காட்சி விலங்கு (உயி)

hirudinea - அட்டைகள்: இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படுபவை. (உயி)

histogenesis - திசுவாக்கம்: விலங்கில் வேறுபட்ட திசுக்கள் தோன்றிப் பெருகுதல் (உயி)

histology - திசுவியல்: திசுக்களை ஆராயுந்துறை. (உயி)

histolysis. திசுச்சிதைவு: திசுக்கள் சிதைதல். (உயி)

HIV, human immuno deficiency virus. எச்.ஐ.வி. மனிதத் தடுப்பாற்றல் குறைபாட்டு நச்சியம். எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது. உயிர்க் கொல்லி.

HLA, Human Leucocyte Antigen - எச்எல்ஏ மனித வெள்ளணு எதிர்ப்பி. மனிதரிடம் இதை அடையாளங் கண்டறிவது உறுப்புப் பதியஞ் செய்தலுக்கும் நோய்ச் சேர்க்கையை அறியவும் இன்றியமையாதது.

holmium - ஓல்மியம்: Ho. மென்மையான மையான தனிமம். தகடாக்கலாம். ஏனைய லாந்தனாய்டுகளுடன் சேர்ந்தே காணப்படுவது. பயன்கள் குறைவு. (வேதி)

hologamy- முழுக்கலப்பு: முதிர்ந்த இரு அணுக்கள் சேர்ந்து, ஒவ்வொன்றும் முழுமையாகப் பாலணுவாதல் (கேமடான்கியம்)