பக்கம்:அறிவியல் அகராதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hom

202

hon


மரபணுக்கள்: ஒரே இயல்புகள் உள்ள நிறப்புரிகளைக் கொண்ட மரபணுக்கள். ஒன்று தந்தையிடமிருந்தும் மற்றொன்று தாயிடமிருந்தும் வருதல் (உயி)

homologous organs - ஓரக உறுப்புகள்: தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும். இவை தோற்ற ஒற்றுமை உடையவை. ஆனால் வேலையில் வேறுபட்டவை. தாவரம். 1. பற்றுக்கம்பி ஒற்றுமை: பிரண்டைப் பற்றுக்கம்பிகள் நுனி மொட்டொடு ஒத்தமைபவை. 2. முள் ஒற்றுமை இலந்தை, கருவேல் ஆகியவற்றின் முட்கள் இலையடிச் செதில்களோடு ஒத்தமைபவை. (உயி)

homologous series - ஓரக வரிசைகள்: இயற்பண்புகளில் ஒழுங்கான படிநிலை காட்டும் ஒரே வகையான வேதிச் சேர்மங்கள் : மீத்தேன், ஈத்தேன். (வேதி)

homologues - ஓரக உருக்கள்: 1. ஒத்தநிலை கொண்ட மனிதனின் கை, பறவைச்சிறகு, திமிங்கலத்தின் துடுப்பு (உயி) 2. ஓரின வரிசை உறுப்புகள்: ஈத்தேன், மீத்தேன். (வேதி)

homology - ஓரகநிலை, ஓரமை: உறுப்பிலும் தோற்றத்திலும் ஒற்றுமை. வேலையில் வேற்றுமை, ஓ. analogy

homolysis, homolytic fission - ஓரகப்பிளவு: வேதிப்பிணைப்பு அறுபடுவதால் நடுநிலை அணுக்கள் அல்லது படிமூலிகள் உண்டாதல். (வேதி)

homomorphous molecules - ஓரக உருவமூலக்கூறுகள்: அளவிலும் வடிவத்திலும் ஒத்த மூலக்கூறுகள். ஏனைய பண்புகளில் அவ்வாறு இரா. அதாவது ஒத்த படிவ உருவமும் வேறுபட்ட வேதி இயைபுங் கொண்டவை. (வேதி)

homosexuality - ஓரகப் பால் கவர்ச்சி: இது ஆண் ஆணை விரும்புதல். பெண் பெண்ணை விரும்புதல். (உயி)

homosporous- ஓரகச்சிதல்: ஒரே வகைச்சிதல். (உயி)

homotaxis - ஓரகமரபமைவு: உயிர் மலர்ச்சியில் மரபு வரிசை ஒன்றிப்பு. இது காலவரிசையில் அமையவேண்டும் என்பதில்லை. (உயி)

honey-தேன்: பூக்களின் தேன் சுரப்பிகளிலிருந்து பெறப்படும் நீர்மத்தைப் பூச்சிகள் பாகு நிலையில் இனிப்பாக்குதல், ஆகவே, இது ஓர் இனிப்பு நீர்மம். தேனீக்களின் உணவு வழியின் விரிவே தேன்பை. இதில் தேன் சேமித்து வைக்கப்படுகிறது. (உயி)

honey buzzard - தேன்பருந்து: தேனீக்களையும் குளவிகளையும் தின்னும் பருந்து. ஆகவே, இதைத் தேனித்தின்னி எனலாம். (உயி)

honey comb - தேனடை: அறுகோண மெழுகு அணுஅமைப்பு.