பக்கம்:அறிவியல் அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hos

204

hum


சிலிர்ப்பும் தோல்சிலிர்ப்பும் ஏற்படுதல். (உயி)

host- ஒம்புயிர் ஒம்பி ஒட்டுண்ணி வாழ இடமளிக்கும உயிரி. திட்ட ஓம்பி (புகையிலை), இடைநிலை ஓம்பி (அனோபிலஸ் கொசு) என இருவகைப்படும். (உயி)

hotline - உயர்விரைவுச் செய்தித் தொடர்பு: நெருக்கடி நிலையில் விரைந்து செய்தி அனுப்பும் கம்பிவழிச் செய்தி. (தொ.நு)

hovercraft - காற்றுத்திண்டூர்தி: தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் இயங்கும் வான ஊர்திவகை. இதன் கீழுள்ள திறப்பிகள் உண்டாக்கும் காற்றுத்திண்டைக் கொண்டு இது முன்னோக்கிச் செல்கிறது. (இய)

Hubble's constant - அபிள் மாறிலி: தொலைவிலிலுள்ள விண்மீன் கூட்டங்களின் பின் தள்ளு நேர்விரைவுகள் நம்மிடமிருந்து அவை இருக்கும் தொலைவுகளுக்கு நேர்வீதத்தில் இருக்கும். இது விண்ணகத்தின் பொதுவிரிவே. இதுவே அபிள்ஸ் மாறிலி Ho, இங்கு Ho என்பது பின்தள்ளு விரைவைத் தொலைவோடு தொடர்புபடுத்துவது. இக்கருத்தை 1920இல் எல்லோருக்கும் இவர் தெரிவித்தார்.

Hubble space telescope- அபிள் வானவெளித் தொலை நோக்கி: 25 குறுக்களவுள்ள ஒளித் தொலைநோக்கி, புவிக்காற்று வெளிக்கு மேல் செயற்கை நிலாவால் கொண்டு செல்லப் பட்டது. புவிக் கருவிகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாக வானவெளிப் பொருள்களை உற்றுநோக்குவது (வா.அறி)

hue - நிறம்: நீலம் முதலிய வண்ணங்களைக் குறிப்பது. இதனை அதன் அலைநீளத்தால் உறுதி செய்தல். (இய)

humerus - மேற்கை எலும்பு மேல் புய எலும்பு. தோள்பட்டை மூட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ளது. (உயி)

humidifier - ஈரமாக்கி: காற்றுக்கு ஈரத்தை அளித்துத் தேவையான ஈரநிலைமைகளை நிலைநிறுத்துங்கருவி (இய)

humidity - ஈரநிலை: காற்று வெளியில் நீராவியின் செறிவு. இது இரு வகைப்படும்.

தனிஈரநிலை: ஒரலகு காற்றுப் பருமனிலுள்ள நீராவியின் பொருண்மை.

ஒப்பு ஈரநிலை: காற்றிலுள்ள ஈரத்திற்கும் ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் காற்று நிறைவுறுமானால் அதில் அப்பொழுதுள்ள ஈரத்திற்குமுள்ள வீதம் விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது. (இய)

humus formation - மட்கு தோன்றல்: குப்பை கூளங்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் பொழுது உண்டாவது மட்கு. இதல் மடிந்த தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பகுதி