பக்கம்:அறிவியல் அகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ind

216

inf


மின்தூண்டல் அடிப்படையில் வேலை செய்யுங்கருவி. அதிக மின்னழுத்தத்தை குறைந்த மின் னழுத்தமுள்ள நேர் மின்னோட் டத்திலிருந்து உண்டாக்குவது.

பயன்கள்: 1. மின்னேற்றக் குழாய்களில் வளி நிறமாலைகளை உண்டாக்கவும். 2. அரிய வளிகளின் வழியாக மின்னேற்றத்தை ஆராயவும். 3. எக்ஸ் கதிர்களை உண்டாக்கவும். 4. அகக்கணற்சி எந்திரத்தில் மின்பொறியை உண்டாக்கவும் பயன்படுவது. (இய)

Indusium-காப்புறை: 1.சில பெரணிகளில் ஒவ்வொரு சிதல் கொத்தையும் பாதியாகவோ முழுதுமாகவோ மூடும் மடிப்புத்திசு. இது சூலொட்டின் புற வளர்ச்சி. 2. பூச்சி வளர் புழுவின் உறை. (உயி)

Industrial chemistry-தொழிற்சாலை வேதியியல்: தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை ஆராயுந்துறை. ஒரு பயனுறு அறிவியல். (வேதி)

Industrial melanism-தொழிற்சாலை மெலானியம்: கரிமாகப்படிவதால் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் தோலில் கறுப்பு நிறம் உண்டாதல். பா. (உயி)

Inert-வினைகுறை: மந்தமான செயல்குறை வளிகள். எ-டு. ஈலியம். (வேதி)

Inertia-நிலைமம்: நியூட்டன் இயக்க விதியால் பெறப்படும் பொருளின் உள்ளார்ந்த பண்பு. புறவிசை ஒன்று தாக்காத வரையில் ஒரு பொருள் அசைவற்ற நிலையிலோ நிலைத்த நேர்விரைவிலோ தொடர்ந்து இருக்கும். தன் நிலைமப்பண்பால் தானாகவே ஒரு பொருள் இயக்கமாற்றத்தைத் தடை செய்யும் (இய)

Inertia, moment of-நிலைமத்திருப்புத்திறன்: ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலைவிலுள்ள m என்னும் நிறையுடைய துகள், அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின், அத்துகளின் நிறை. நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகிய வற்றின் பெருக்கற் பலன் (mr2) நிலைமத் திருப்புத்திறனாகும். இது ஒரு மாறிலி, அலகு மெட்ரிக் முறையில் கிராம்/செமீ2(இய)

Infection-தொற்றல்: ஒரு நோய். ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்குப் பரவுதல். எ-டு. சொறி சிரங்கு, நீர்க் கொள்ளல். (உயி)

Infectious diseases-தொற்றுநோய்கள்: காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறு அளவில் தீங்கு விளைவிப்பவை. காலரா முதலியவை விரைவில்