பக்கம்:அறிவியல் அகராதி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inf

217

inh

பரவிப் பெருந்தீங்கை உண்டாக்குபவை. ஆகவே, இவை கொள்ளை நோய்கள். (உயி)

Inferior ovary - கீழ்ச்சூல்பை: இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower. (உயி)

Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. மற்றொன்று மேற் பெருஞ் சிரை (சுப்பீரியர் இனகாவா) (உயி)

Inflammation-அழற்சி:காயம்,நோய், தொற்றல், உறுத்துதல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். அறிகுறிகள்: விக்கம், சிவத்தல், அரிப்பு, வலி. (மரு).

Inflorescence-பூக்கொத்து:தனியாகவோ கொத்தாகவோ தண்டில் பூ அமைந்திருக்கும் முறை. இது மூவகைப்படும். 1. நெடுங்கொத்து:(ரெசிமோஸ்)இது முடிவில்லாத பூங்கொத்து: கடுகு, அவரை. 2. குறுங்கொத்து:(சைமோஸ்)இது முடிவுள்ள பூக்கொத்து: மல்லிகை. 3. மீங் கொத்து: (ஸ்பெஷலைசிடு) தனியமைப்பு பெற்றது:அத்தி இம்மூன்றும் மேலும் பலவகைப்படும். (உயி)

Influenza-சளிக்காய்ச்சல்:ஃபுளு நச்சியத்தால் உண்டாவது.மூச்சுவழியின் மென்படலத்தைப்பாதிப்பது.கடுமையாகதாக்குவது. மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இருக்கும்.(உயி)

Information theory-செய்திக்கொள்கை:பா communication theory.(தொ.நு)

Infrared radiation-சிவப்புக்கதிர்வீச்சு: மின்காந்தக் கதிர்வீச்சு கண்ணிற்குப் புலப்படாதது. நிறமாலையில் சிவப்பு நிறத்திற்கப்பால் இருப்பது. பார்க்கக் கூடிய ஒளிக்கும் வானொலி அலைக்கும் இடைப்பட்ட அலை நீளம். மூடுபனியில் ஊடுருவ வல்லது. இதனை 1800இல் சர் வில்லியம் ஹெர்ஷல் (1738-1822) என்பவர் கண்டறிந்தார். வானிலை ஆராய்ச்சியிலும் வானவெளி ஆராய்சியிலும் பயன்படுவது.(இய)

Infundibulum-கூம்பகம்: 1.கூம்பு வடிவத்திலுள்ள வழி. 2.மூளைத்தளப்புற வளர்ச்சி. பிட்யூட்டரி சுரப்பியின் பகுதியாக அமைவது. (உயி) Ingestion-உட்கொள்ளல்: இஃது உணவு கொள்ளும் இயற்பியல் செயல். இதைத் தொடர்வது உணவு செரித்தல் என்னும் வேதிச் செயல். (உயி)

Inguinal region-அரைப்பூட்டுப்பகுதி: 1. வயிற்றுக்கும் தொடைக்கும் இடையிலுள்ள பகுதி: மனிதன். 2.மலப்புழைக்கும் வயிற்றுக்குமிடையே உள்ள பகுதி:பாலூட்டிகள். (உயி)

Inhalation, inspiration-உள்மூச்சு: உயிர்வளியை உள்ளிழுத்தல். உயிர்த்தலின் ஒருவகை. (உயி)