பக்கம்:அறிவியல் அகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iro

224

oso


iron (ferric) chloride - பெரிக் குளோரைடு: FeCl3 மாநிற மஞ்சள் நிறம். நீர் ஈர்க்கும் படிகம். சூடாக்கிய இரும்புத் துருவல்களில் உலர் குளோரினைச் செலுத்திப் பெறலாம். ஈத்தர், நீர், ஆல்ககால் ஆகிய வற்றில் கரைவது. மருந்துகளில் பயன்படுவது. ஆய்வக வினையாக்கி (வேதி)

iron (ferric)-பெரிக் ஆக்சைடு Fe2O3 சிவந்த மாநிறம். இயற்கையில் ஹேமடைட்டுத் தாதுவாகக் கிடைத்தல். கந்தகக்காடி உண்டாக்குவதில் விளைபொருளாகக் கிடைப்பது. நிறமியாகவும் நிறம்நிறுத்தி யாகவும் பயன்படல். (வேதி)

iron (ferric) sulphate - பெரிகச் சல்பேட்டு: Fe2(SO4)3, நீருள்ள மஞ்சள் நிறச்சேர்மம். காடி சேர்ந்த பெரகச் சல்பேட்டுடன் அய்டிரஜன் பெராக்சைடைச் சேர்த்து வெப்பப்படுத்திப் பெற லாம். பருமனறி பகுப்பில் பயன்படல். (வேதி)

iron (ferrous) sulphate -பெரசச் சல்பேட்டு: FesO47H2O. பசுந்துத்தம். சாய்வரிசைப் படிகம். நீர்த்த கந்தகக் காடியில் இரும்புத் துருவலைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். தோல் பதனிடுதலிலும் சாயத் தொழிலிலும் பயன்படுதல். பருமனறி வகுப்பில் வினையாக்கி. (வேதி)

irradiation - கதிர்வீச்சு: மின்காந்த அலைகளுக்கு உட்படுதல். (இய)

irreversible reaction -மீளா வினை: மீண்டும் நடைபெறா வினை.(வேதி)

irritability -உறுத்துணர்ச்சி: தூண்டலுக்கேற்ற துலங்கல். உயிரியின் இயல்புகளில் ஒன்று. (உயி)

IRS - ஐஆர்எஸ்: இந்திய தொலையறி நிலா. (இய)

IRS series - ஐஆர்எஸ் வரிசை: இவை இந்தியத் தொலையுணர் நிலாக்கள். ஐஆர்எஸ் பி2, ஐஆர்எஸ் 1.சி., ஐஆர்எஸ் 3 ஆகியவை இவ்வரிசையில் ஏவப்பட்டவை. (வா.அ)

ischium - இடுப்புப் பக்க எலும்பு: முதுகெலும்பிகளின் இடுப்பு வளையத்தின் பின் எலும்பு. (உயி)

islets of Langerhans இலாங்கர்கன் திட்டுச் சுரப்பிகள்: இவற்றை 1869இல் இலாங்கர்கன் விளக்கினார். இன்சுலினைச் சுரப்பவை. இவை கணையத்தி லுள்ளன. இச்சுரப்பு குருதியில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது. (உயி)

isobars-சமச்சீரிகள்: ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணு வெண்ணுங் கொண்ட வெவ்வேறு தனிம அணுக்களுக்கு ஓரகச் சீரிகள் என்று பெயர். எ-டு:1. Pa91234U92234. 2. நிலையான காற்றழுத்தமுடைய பரப்பின் எல்லைகளைப் படத்தில் காட்டும் கோடுகள் (பு:அறி)