பக்கம்:அறிவியல் அகராதி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jug

228

kar


H = I2Rt ஜூல்கள். (இய)

jugular artery - கழுத்துத்தமனி: கழுத்துப் பகுதியிலுள்ளது. (உயி)

jugular vein - கழுத்துச்சிரை: கழுத்தப் பகுதியிலுள்ளது. (உயி)

jump - தாவல்: எந்திரக் குறித் தொகுதிக் கட்டளை. செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ் நிரலைக் (புரோகிராம்) கணிப்பொறி வாயிலாக உடன்நிறுத்துமாறு செய்வது. நிகழ்நிரலின் அடுத்த பகுதிக்குச் செல்வது. (இய)

Jupiter - வியாழன்: கதிரவன் குடும்பத்தில் மிகப் பெரிய கோள். கதிரவனிடமிருந்து ஐந்தாவதாக உள்ளது. இதற்கு 16 நிலாக்கள் உண்டு. அவற்றில் பெரியது ஐஒ. (வாணி)

Jurassic - இயல்பு வாழ்காலம்: இடை உயிர்காலத்தின் இடைப் பகுதி 190 - 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. பா. geological eras. (பு.அறி)

juvenile - இளநிலை: ஒர் உயிரியின் முதிர்ச்சியடையாத நிலை. வழக்கமாக இது முதிய உயிரியிலிருந்து வேறுபட்ட வடிவத்தில் இருப்பது மட்டுமின்றி, இனப் பெருக்கம் செய்யவும் இயலாது. (உயி)


K

kaleidoscope - பல்வண்ண நோக்கி: விளையாட்டுக் கருவி. நெசவாளர்களால் பயன்படுத்தப்படுவது. துண்டுமணிகள் ஆடிகளால் மறிக்கப்படுவதால், பலப் பல வண்ணங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும். ஒரு கோணத்தில் அமைக்கப்பட்ட இரு சமதள ஆடிகள் பல உருக்களை உண்டாக்கும் என்பது நெறிமுறை. (இய)

kangaroo - கங்காரு: மதலைப்பை உடைய பெரிய ஆஸ்திரேலிய விலங்கு. நீண்ட வலுவான பின் கால்கள் உண்டு. இவை தாவிக் குதித்தோடப் பயன் படுபவை. தன் குட்டியைச் சுமந்து செல்ல அதற்கு வயிற்றுப் புறத்தில் பை இருக்கும். (உயி)

kangaroo mother - கங்காரு தாய்: 1990களில் டாக்டர் கெராட் ரே சனாப்ரியா என்பவரால் கங்காரு நடத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடையளிக்கும் துணுக்கம். குறை வளர்ச்சியுடன் பிறந்த குழந்தைகளைக் காக்க உதவுவது. (மரு)

kaolin - கேயோலின்: சீனக் களிமண், இயற்கை அலுமினியம் சிலிகேட்டு. வாய் வழி உட்கொள்ள நச்சுப் பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப் போக்கு, குடல் அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுதல். (வேதி)

karyo - உட்கரு: உயிரணுவின் கரு. (உயி) ஒ. atomic nucleus

karyogamy - உட்கருக்கலப்பு: