பக்கம்:அறிவியல் அகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kin

231

kip


kindling temperature - தூண்டு வெப்பநிலை: ஒரு பொருள் தீப்பற்றி எரியும் மிகக் குறைந்த வெப்பநிலை. (இய)

kindred - மரபுவரிசை: ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் கலப்புத் தொடர்பைக் காட்டும் படம். (உயி)

kinematics - பருப்பொருள் இயக்கவியல்: பொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. (இய)

kinescope - படக்குழாய், எதிர்மின் வாய்க் கதிர்க்குழாய்: தொலைக்காட்சிப் பெறுங் கருவியில் இருப்பது. (இய)

kinesis - தூண்டலியக்கம்: ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல் நோக்கி நகர்வது. இயக்கம், தூண்டல் செறிவைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, மரப்பேன் ஈரச்சூழலில் மெதுவாகவும் உலர் சூழலில் விரைவாகவும் செல்லும். (உயி)

kinetics - 1. விசை இயக்கவியல்: இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்துறை. வெப்பநிலை, அழுத்தம் முதலிய வேறுபட்ட நிலைகளில் வினைவீதத்தை ஆராய்ந்து, வினைகளின் நுட்பத்தை உறுதி செய்தல். இதுவே வேதிவினை இயக்கவியலின் முதன்மையான நோக்கம். (வேதி)

kinetic theory - விசை இயக்கக் கொள்கை: கவுண்ட் ரம்போர்டு (1753-1874), ஜேம்ஸ் ஜூல் (1818-1889) மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல் (1831-1879) ஆகிய மூவருஞ் சேர்ந்து உருவாக்கிய கொள்கை. பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது. (இய)

kinetochore - இயக்கப்பற்றி: நிறப்புரியின் பகுதி; உட்கருப் பிரிவின்போது இதில் கதிரிழைகள் இணைதல். (உயி)

kingcrab - அரசநண்டு: உண்மை நண்டன்று. தொடக்க காலக் கணுக்காலி, புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது. ஆழமற்ற நீர்நிலைகளில் வாழ்வது. (உயி)

kingdom - உயிரினம், உலகம்: இருவகைப்பாட்டுப் பிரிவுகள். ஒன்று தாவர இனம் (பிளாண்ட் கிங்டம்), மற்றொன்று விலங்கினம் (அனிமல் கிங்டம்). (உயி)

kinoplasm - இயக்கக்கணியம்: முன்கணியம். இழைகளாலானது போல் தோன்றி, உயிரணுப் பிரிவில் கதிரிழைகளைக் கொண்டது. விண்மீன் கதிர்களை (ஆஸ்ட்ரல் ரேஸ்) ஈர்ப்பது. (உயி)

Kipp's apparatus - கிப்பின் கருவி: இது மூன்று குமிழ்களைக் கொண்டது. மேல்குமிழ் (முதல் குமிழ்). நடுக்குமிழ் (இரண்டாங்