பக்கம்:அறிவியல் அகராதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



lar

237

lat


lard - பன்றிக் கொழுப்பு: தூய்மையாக்கிய பன்றி உட் கொழுப்பு. ஓலைன், பாமிட்டின், ஈரின் முதலிய வேதிப்பொருள்களைக் கொண்டது. (வேதி)

large intestine - பெருங்குடல்: பா.colon.

larva - வேற்றிளரி: முட்டையிலிருந்து வெளிவரும் இளமுயிர். முதிரியிலிருந்து (முதிர் உயிரிலிருந்து) வேறுபடுவது. எ-டு. கம்பளிப்புழு, பா. planula,

larvicide-இளரிக்கொல்லி: இளம் உயிரிகளைக் கொல்லும் நச்சு. (உயி)

larynx - குரல்வளை: மூச்சுக் குழலுக்கும் நாக்கின் அடிக்கும் இடையிலுள்ள உறுப்பு. குரல் நாண்களைக் கொண்டது. மீன் தவிர, எல்லா முதுகெலும்பி களிலும் உண்டு. (உயி)

laser - இலேசர்: இரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கங் கொண்ட சொல். கதிர் வீச்சு தூண்டுமிழ்வு ஒளிப் பெருக்கம் (LASER-Light Ampification by Stimulated Emission of Radiation). ஓர் உயரிய ஒளிக் கருவி ஆற்றல் வாய்ந்ததும் ஒருங்கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்க வல்லது. இக் கற்றை ஒற்றை அலை நீளமுடையது. படிகப் பெருக்கிக்கு (டிரான்சிஸ்டர்) அடுத்து, அறிவியல் உலகில் ஆய்வு நிலையில் புரட்சி செய்துவருங் கருவி. மருத்துவம், தொழில் நுணுக்கவியல் முதலிய அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுவது. பா. maser. (இய)

lateral line - மருங்குகோடு: இரு வாழ்விகளிலும் மீன்களிலும் பக்கத்தில் காணப்படுங்கோடு, புலனுறுப்பின் நிலையைக் குறிப்பது. (உயி)

lateral ventricles - மருங்கறைகள்: பெருமூளை அரைத்திரள்களில் உள்ள ஓரிணைக்குழிகள். (உயி)

latex - மரப்பால்: சில பூக்குந் தாவரங்களில் காணப்படும் வெண்ணிற நீர்மம். மருந்துகளிலும் ரப்பர் செய்யவும் பயன்படுவது. (உயி)

latitude - குறுக்குக்கோடு: அட்சக் கோடு. இது கிழக்கு மேற்காகச் செல்வது. புவி, உருண்டை இது ஓரிடத்தைத் துல்லியமாகக் காணப்பயன்படுவது. ஒ. longitude (பு.அறி)

lattice - பின்னலமைவு: அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம். (இய)

lattice energy - பின்னலாற்றல்: அணியாற்றல். குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை