பக்கம்:அறிவியல் அகராதி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
amm
amp
22

ammonia - அம்மோனியா: NH3 நச்சில்லா வளி, காரமணம் கொண்டது. வெடிமருந்து உரம் முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

ammonication - அம்மோனியா உண்டாதல்: பேசிலஸ் மைக்காய்டிஸ் முதலிய குச்சியங்களால் இறந்த கரிப் பொருட்கள் சிதைக்கப்படும் பொழுது அம்மோனியா உண்டாகிறது. (உயி)

ammonifying bacteria - அம்மோனியாவாக்கும் குச்சியங்கள்: புரதத்தையும் மற்றும் வெடிவளி (நைட்ரஜன்) ஊட்டமுள்ள பொருள்களையும் சிதைத்து அம்மோனியாவை உண்டாக்குபவை. (உயிர்)

ammonium bicarbonate - அம்மோனியம் பைகார்பனேட்: NH4HCO3. வெண்ணிறப்படிகம். சமையல் தூள். (வேதி)

ammonium carbonate - அம்மோனியம் கார்பனேட்: (NH4)2 CO3. அம்மோனிய நெடியுள்ள வெண்ணிறப் பொருள். நீரில் கரையக் கூடியது. முகரும் உப்பு. ரொட்டித் தொழிலிலும், சாயத் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

ammonium nitrate - அம்மோனியம் நைட்ரேட்: NH4NO3. நீர் ஈர்க்கும் உப்பு நிறமற்றது. படிக மற்றது. நீரில் நன்கு கரையக் கூடியது. ஆல்ககாலிலும் நன்கு கரைவது. வெடிமருந்து. உரம். (வேதி)

ammonium phosphates - அம்மோனியம் பாஸ்பேட்டுகள்: (NH4)2HPO4, (NH4)2PO4 பாசுவரிகக் காடியிலிருந்து கிடைக்கும் உப்புகள். சிறந்த உரங்கள். (வேதி)

ammonium sulphate - அம்மோனியம் சல்பேட்: (NH4)3 SO4. வெண்ணிறப்படிகம். உரம். (வேதி)

amniocentesis - பனிக்குடத் துளைப்பு: பேறுகால மகளிரிடமிருந்து பனிக்குடநீர், ஆய்வுக்காக எடுக்கப்படுதல். (மரு)

amnion- பனிக்குடம்: நிலம் வாழ் முதுகெலும்பிகளின் கருப்படலம், இது கருவினைப் பாதுகாப்பது. (உயி)

amoeba - அமீபா: உருமாறி. புரோட்டோசோவா (முதல் தோன்றி) பிரிவைச் சார்ந்த ஒற்றைக் கண்ணறை உயிரி. நன்னிரிலும், கடல் நீரிலும் வாழ்வது. ஒற்றைக் கண்ணறையே உடற்செயல்கள் யாவற்றையும் நிறைவேற்றுகிறது. விலங்குகளில் முதலில் தோன்றியது இப்பிரிவைச் சார்ந்த உயிரிகள் ஒட்டுண்ணிகள். (உயி)

ampere - ஆம்பியர்: மின்னோட்ட அலகு: பிரஞ்சு இயற்பியலார் (1775-1836) ஆம்பியர் பெயரால் அமைந்தது. ஓர் ஒம் தடைக்கு எதிராக ஒர் ஒல்ட் மின்னியக்கு விசை அளிக்கும் மின்னோட்டம் இது. (இய)