பக்கம்:அறிவியல் அகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lav

239

law


யக்கத் தனிமம். ஆக்டினைடு வரிசையைச் சார்ந்தது. கலிபோர் னியத்தைச் சிதைப்பதால் உண் டாவது. புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன. (வேதி)

lava - எரிமலை குழம்பு: எரிமலையிலிருந்து உண்டாகும் உருகிய பாறைக் கக்கல். (பு.அறி)

laws of electromagnetic induction - மின்தூண்டல் விதிகள்: (1) பாரடே விதிகள்: 1. மூடிய சுற்றுடன் தொடர்புள்ள காந்தப் பாயம் மாறும்போது, அதில் மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. காந்தப் பாயம் மாறும் வரை மட்டுமே மின்னியக்கு விசை தூண்டப்பெறும். 2. தூண்டப்படும் மின்னியக்கு விசை, காந்த விசைக்கோடுகள் ஆகியவை மாறும் வீதத்திற்கு நேர் வீதத்தில் இருக்கும். (2) லென்ஸ் விதி: தூண்டப்பட்ட மின்னோட்டமும் மின்னியக்கு விசையும் அவற்றைத் துண்டிய காந்தப் பாயத்தை உண்டாக்கிய மின்னியக்கு விசைக்கு எதிர்த் திசையில் இருக்கும். (இய)

laws of reflection - ஒளிமறிப்பு விதிகள்: 1. படுகதிர், செங்குத்துக்கோடு, மறிப்புக் கதிர் ஆகிய மூன்றும் ஒரே மட்டத்தில் இருக்கும். செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் செங்குத்துக் கதிரும் இருக்கும். 2.படுகோணம் = மறிப்புக் கோணம். (இய)

laws of refraction- ஒளிவிலகலின் விதிகள்: 1. படுகதிர், செங்குத்துக் கோடு, விலகு கதிர் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் இருக்கும். 2. செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படு கோணத்தின் சைனும் விலகு கோணத்தின் சைனும் எப்பொழு தும் மாறா வீதத்தில் இருக்கும். வீதம் ஒளியின் நிறத்தையும் ஊடகங்களையும் பொறுத்தது. (இய)

laws of sonometer - இசைமானி விதிகள்: 1. இழுத்துப் பொருத்தப் பட்ட கம்பியின் இழுவிசை (T) மாறாநிலையில், அதன் அதிர் வெண் (n) கம்பி நீளத்திற்கு (l) எதிர் வீதத்தில் இருக்கும். அதாவது, nl என்பது மாறா எண். 2. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் நீளம் (l), மாறா நிலையில் அதன் அதிர்வெண் (n) இழுவிசையின் இருமடி. மூலத்திற்கு √T நேர் விதத்தில் இருக்கும். அதாவது √T/N ,என்பது மாறா எண். 3. இழுத்துப் பொருத்தப் பட்ட கம்பியின் இழுவிசை (T) மாறாநிலையில் குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்குக் கம்பி நீளம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு (√m) எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது √m என்பது மாறா எண். (இய)