பக்கம்:அறிவியல் அகராதி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Lin

245

liq


Linde process - லிண்டு முறை: இறுக்கத்தால் வளிகளை நீர்மமாக்கும் முறை. (வேதி)

linear - நீள்வடிவம்: புல், (உயி)

linear behaviour -நீள் சார்பு நடத்தை: ஒளிவிலகல், மறிப்பு முதலியவை. ஆடி, ஊடகம் முதலியவை நீள்சார் பொருள்கள். நீள்தூண்டலை உண்டாக்குபவை. ஓ. non-linear materials.

linear expansion - நீள்பெருக்கம்: ஒரு திசையில் ஒரு பொருளின் பெருக்கம். அதாவது, திண்மப்பொருள் கம்பி நீளத்தில் பின்ன அளவு உயர்வு, குறிப்பிட்ட வெப்பநிலையில் பெறுதல். (இய)

linear material - நீள்சார்புப்பொருள்: நீள் சார்பு நிகழ்ச்சியுள்ள பொருள். எ-டு முப்பட்டகம், வில்லை.

line printer - வரி அச்சியற்றி: எழுத்து வரியை அச்சிடும் கணிப்பொறியின் வெளிப்பாட்டுக்கருவி. ஒரு நிமிடத்துக்கு 200 - 300 வரிகள் வரை அச்சிட வல்லது. (இய)

linetester-மின்னாய்வி: மின்சுற்று மூடிய நிலயில் அதில் மின்சாரம் உள்ளதா என்பதைக் கண்டறியும் திருப்புளி போன்ற கருவி. மின் பழுது நிலையில் இது பயன்படுவது. (இய)

linkage - மரபிணைவு: இரண்டிற்கு மேற்பட்ட இணைமாற்று. உருவமில்லாத மரபணுக்களின் சேர்க்கை. இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பிரிக்க இயலாத அலகாகச் செல்வது. ஒரே நிறப்புரியில் இருப்பதால், எவ்வகைத் தனி ஒதுக்கலும் (இண்டிபெண்டண்ட்) இல்லாதது.

Linnaean system - லின்னே முறை: ஓர் உயிருக்கு இரு பெயர் இடும் முறை. எ.டு. ஓமோ சேப்பியன்ஸ் (மனிதன்) (உயி)

lipase - லிப்பேஸ்: இரைப்பை நீரிலும் சிறுகுடல் நீரிலும் காணப்படும் நொதி கொழுப்பைக் கொழுப்புக்காடியாகவும் கிளசரிலாகவும் மாற்றுவது.

lipids - கொழுப்பிகள்: கரிமச் சேர்மங்கள். நீரில் கரையா. கொழுப்புக் கரைப்பானில் கரையும். தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும். இவை கொழுப்புகள், எண்ணெய்கள் முதலியவை ஆகும். (உயி)

lipocyte - கொழுப்பணு: மிகுதியாகக் கொழுப்பைக் கொண்டுள்ள கண்ணறை (செல்) (உயி)

lipoproteins - கொழுப்புப் புரதங்கள்: நரம்புத்திசுவில் நீரில் கரையும் சில புரதங்களோடு சேர்ந்து காணப்படும் கொலாஸ்டிராலும் ஏனைய கொழுப்புகளும். (உயி)

liquation - உருக்கிப்பகுத்தல்: தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிப்பதற்குமுன் அவற்றைத் தூய்மைப்படுத்தும் முறை. இதில் உருகாத அழுக்குகள் சூடாக்கும் பொழுது நீங்கும். சரிவுலையில் துய்மையற்ற