பக்கம்:அறிவியல் அகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

loo

249

LPG


தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள்.

Loop of Henle-என்லி சுருள்: சிறுநீர்ப் பிரித்தியின் ஒரு பகுதி. பெரும்பான்மை நீர் மீண்டும் உட்கவரப்படுதல் நடைபெறும் பகுதி. (உயி)

loopline -சுருள்வழி:கிளை இருப்புவழி. மீண்டும் முதல் வழிக்கு வருவது.

lophodont teeth -பிளவுறு கடைவாய்ப்பற்கள்: யானை, குதிரை ஆகிய விலங்குகளில் கடைவாய்ப்பற்களில் குறுக்கு வரிப்பிளவுகள் இருத்தல் (உயி)

lophotrichous -முடி நீளிழையுள்ள: ஒரு முனையில் முடி போன்று கசை இழைகள் தொகுதியாக இருக்கும். எ-டு. குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்) (உயி)

loran, Long- Range Aid to Navigation -லோரன், கப்பல் போக்குவரத்திற்கு நீண்ட எல்லை உதவி: வானவூர்திகள் அல்லது கப்பல்களுக்குரிய வானொலி வழிப் போக்குவரத்துமுறை. நிலையாகவுள்ள வேறுபட்ட இடங்களிலிருந்து குறிபாடுகள் பெறப்பட்டுக் கால இடைவெளிகள் ஒப்பிடப்படுதல். ஓ. radar, sonar (இய)

lorica - காப்புறை: குற்றிழையுள்ள முதல் தோன்றிகள் (சிலியேட்

டட் புரோட்டோ சோவா) முதலிய கீழின உயிரிகள் சுரக்கும் பாதுகாப்புறை. (உயி)

lotic ஓடுநீர்த் தொகுதி: நன்னீர்ச் சூழ்நிலைத் தொகுதி. இதில் நீர் தொடர்ச்சியாகச் செல்லும்: ஆறு. (உயி)

loud speaker -ஒலிப்பெருக்கி: மின்னோட்டங்களை ஒலியாக மாற்றுங் கருவி. (இய)

louse-பேன்:ஒரு நோய்த்தொற்று.(உயி)

Lowry-Bronsted concept - லோரி-பிரான்ஸ்டெட்டு கருத்து: இதன்படி ஒரு முன்னணுவைக் கொடுக்கும் பொருள் காடி. அம்முதலணுவை ஏற்கும் பொருள் காரம், அதாவது, காடி என்பது முதலணு கொடுப்பி, காரம் என்பது முதலணு ஏற்பி. (வேதி)

LPG, liquid petroleum gas - எல்பிஜி, நீர்மபெட்ரோலிய வளி: அய்டிரோ கார்பன்கள் சேர்ந்தவை. பெட்ரோலியத்தை நேர்த் தியாக்கும் தொழிற் சாலைகளில் பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுவது. வீட்டிலும் தொழிற் சாலையிலும் எரிபொருள் வாணிப அளவில் இரு கலவைகள் உள்ளன. 1. பூட்டேன் (85% சிறிது புரோபேன், பெண்டேனுடன் சேர்ந்திருக்கும். 2. புரோபேன் (92%) இதில் பூட்டேன் ஈத்தேன் சேர்ந்திருக்கும். இண்டேன் என்பது வாணிபப் பெயர். பா.LNG (வேதி)