பக்கம்:அறிவியல் அகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mac

252

mag



களை வழங்கல். 2. உருவளர்ச்சியின் பொழுது கண்ணறை களையும் திசுக்களையும் அழிப் பதில் ஈடுபடுதல்.

M

machine - எந்திரம்: ஒரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குத் திறனைச் செலுத்தும் கருவி. பா. simple machine. (இய)

macrobiotics - பெருவாழ்வியல்: வாழ்நாள் நீட்டிப்பை ஆராயுந் துறை. (உயி)

macromere - பெருவணு: சில விலங்குகளின் பிளவிப் பெருகலின்போது மஞ்சள் கருவுள்ள பெரிய அணு. (உயி)

macrometer - பெருமானி: ஒளியியல் கருவி. குவிக்குந்தொலை நோக்கியும் இரு ஆடிகளுங் கொண்டது. இதைக் கொண்டு தொலைபொருள் எல்லையை மதிப்பிடலாம். (இய)

macronucleus - பெருவுட்கருவு: குற்றிழை தோன்றிகளின் (ciated protozoa) இருவுட் கருக்களில் ஒன்று. மற்றொன்று சிறுவுட்கரு. எ டு: பரமேசியம். (உயி)

macronutrient - பெருவுட்டப் பொருள்: ஒரு தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்கு அதிக அளவில் தேவைப்படும் அடிப்படைத் தனிமம். எ-டு. கரி, நீர் வளி, இரும்பு, மக்னீசியம் வெடிவளி முதலியவை. (உயி)

maggot - புழுஇளரி: இது ஒரு காலற்ற இளரி. தலையும் கால்களும் இல்லா இந்த வேற்றிளரி, சில அறுகால்களில் வாழ்வது. காற்றில் காணப்படுவது, எ-டு: ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள். ஒ. (உயி)

magic number - கண்கட்டு எண்: (1). 2,8,20,28,50,82,126 ஆகிய எண்கள் (2). இவ்வெண்களைக் கொண்டவை அணுக்கரு நடு நிலையனுக்களும், முன்னணுக்களும். இவற்றிற்குத் தனி நிலைப் புத்திறன் உண்டு. (இய)

magma - கற்குழம்பு: பாறைக் குழம்பாக எரிமலையிலிருந்து வருவது. உறைந்து பாறையாக மாறுவது. (பு:அறி)

magnalium - மக்னாலியம் : அலுமினிய அடிப்படையில் அமைந்த உலோகக் கலவையின் வாணிபப் பெயர். செம்பு, மக்னீசியம் ஆகிய உலோகங் களும் சேர்ந்திருக்கும். (வேதி)

magnesite - மக்னசைட்: மக்னீசியத் தாது. (வேதி)

magnesium - மக்னீசியம்: Mg. வெண்ணிறக் காரமண் உலோகம், கார்னலை ட், டோலமைட், எப்சம் உப்பு, மாக்னைட்டு ஆகிய தாதுக்களாக இயற்கையில் கிடைப்பது. உருகிய மக்னீசிய குளோரைடை மின்னாற்பகுக்க இப்பொருள் கிடைக்கும். கூசொளி குமிழிகளிலும் பல கரிமச் சேர்மங்கள் செய்யவும் சிலிக்கனைப் பிரிக்கவும் பயன்