பக்கம்:அறிவியல் அகராதி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mag

253

mag



படல். (வேதி)

magnesium chloride- மக்னீசியம் குளோரைடு: MgCL2. நீரற்ற உப்பு. உலர்ந்த நீர்வளிக் குளோரைடில் அறுஅய்டிரேட்டை வெப்பப்படுத்திப் பெறலாம். நெசவுத்தொழிலில் பயன்படுதல். (வேதி)

magnesium hydroxide- மக்னீசியம் அய்டிராக்சைடு: Mg(OH)2. வெண்ணிறத்துள். இழுது போன்ற வீழ் படிவு. கழிவுப்பாகிலிருந்து சர்க்கரையைப் பிரிக்கப் பயன்படுதல். (வேதி)

magnesium oxide - மக்னீசியம் ஆக்சைடு: MgO. நீரில் கரையும் வெண்ணிறத்துள். காற்றில் மக்னீசியத்தை எரித்துப் பெறலாம். உலைகளில் வெப்பத் தடைக்கரைகளை அமைக்கவும் மூசைகள் செய்யவும் காடித் தன்மையைத் திருத்தும் மருந்துகள் செய்யவும் பயன்படல். (வேதி)

magnesium sulphate - மக்னீசியம் சல்பேட்டு: MgSO4. இயற்கையில் கிசரைட்டு என்னும் தாதுவாகக் கிடைத்தல். திட்ட மான ஒளிபுகும் படிகம். காற்றில் திறந்து வைக்கப்படிக நீரை இழக்கும். பேதிமருந்து, நிறம் நிறுத்தி (வேதி)

magnet - காந்தம்: பொதுவாக இரும்பைக் கவரக் கூடிய பொருள்களைக் காந்தம் என்கிறோம். இது சட்ட வடிவத்திலே வளைவு வடிவத்திலோ இருக்கும். பின்னதிற்குக் காந்த ஆற்றல் அதிகம், வடிவகாந்தம் நிலைக்காந்தமாகும். மின்காந்தம் தற்காலிக காந்தம். இதில் மின்சாரம் இருக்கும் வரையில் தான் காந்தம் இருக்கும். (இய)

magnetism - காந்தவியல்: காந்த விசைப் புலங்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயுந்துறை. (இய)

magnetic axis - காந்த அச்சு: ஒரு காந்தத்தின் இரு முனை மையங்கள் வழியாகச் செல்லும் கோடு. (இய)

magnetic circuit - காந்த சுற்று: காந்த விசைக்கோடுகளால் உண்டாகும் மூடியவழி. எ-டு. இலாட காந்தம். இதன் அடியில் ஒர் இரும்புச் சட்டத்தை வைக்க, அதன் சுற்று மேம்பாடு அடையும். (இய)

magnetic compass - காந்த திசைகாட்டி: காந்த விசைப் புலத்திசையைக் காட்டுங்கருவி, இதிலுள்ள காந்தம் அசைந்து திசையைக் காட்டுவது. (இய)

magnetic constant - காந்த மாறிலி: எஸ்ஐ அலகில் தனிக் கிசவுத் திறன் (அப்சல்யூட் பர்மியபிலிட்டி என்பது ஒரு பொருளின் காந்தப்பாய அடர்த்திக்கும் (B) புறக்காந்த வலிமைக்கும் (H) உள்ள வீதம். µ=B/H. அலகு ஹென்றி./மீட்டர் (Hm-1).