பக்கம்:அறிவியல் அகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mag

254

mag



ஒரு பொருளின் சார்புக் கசிவுத் திறன் என்பது (ரிலேட்டிவ் பர்மியபிலிட்டி அதன் தனிமக் கசிவுத் திறனுக்கும் வெற்றிடக் கசிவுத் திறனுக்குமுள்ள வீதம். ஆகவே, அது பருமனற்றது. μr = μ/μ0 (இய)

magnetic declination - காந்த விலக்கம்: நிலமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், காந்த முனை வழிவட்டத்திற்கும் நில முனை வழி வட்டத்திற்கும் இடையிலுள்ள கோணம். (இய)

magnetic dip, inclination - காந்தச்சரிவு: நிலமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நில காந்தப் புலத்திற்கும் காந்தச் சரிவுக்குமிடையில் உள்ள கோணம். (இய)

magnetic dipole - காந்த முனை: சட்ட காந்தத்திலுள்ளது போன்று சிறிது தொலைவிலுள்ள வடமுனை தென்முனை நாடும் ஒரிணை காந்தமுனைகள். (இய)

magnetic elements - காந்த மூலங்கள்: நிலவுலகின் காந்த ஆற்றல், எப்புள்ளியிலும் மூன்று காந்த மூலங்களால் வரையறுக்கப்படுகிறது. அப்புள்ளியில் இவை காந்தப் புலத்தின் வலிமையையும் திசையையும் அளிக்கும். அவை 1. கிடைமட்டச் செறிவு 2. சரிவுக்கோணம் 3. விலக்கக் கோணம் ஆகும். இவை இடத்திற்கிடம் மாறுபடுபவை. (இய)

magnetic equator - காந்த நடுக்கோடு: சுழிச்சரிவின் புள்ளி களைச் சேர்க்கும் கோடு (இய)

magnetic field - காந்தப்புலம்: காந்தவிசை உணரப்படும் பகுதி. (இய)

magnetic field strength, Intensity-காந்தப்புலச் செறிவு: காந்தம் ஒன்றின் திருப்புத்திறனுக்கும் (M) அதன் பருமனுக்கும் (V) இடையே உள்ள தகவு. அதன் காந்தச் செறிவு (J) ஆகும். (இய)

magnetic flux-காந்தப்பாயம்: ஒரு பரப்புவழி அமையும் காந்தப் புலவலிமை. ஒரு பரப்பு வழிச் செல்லும் காந்தத் திசைக் கோடுகளின் எண்ணிக்கை என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்தது. (இய)

magnetic flux density - காந்தப் பாய அடர்த்தி: ஒரு காந்தப் புலத்தில் ஓரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் ஒட்டம். ஒரலகு பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்றும் கருதப்படுகிறது. (இய)

B=F/Qv, (B- புலம். F- விசை. Q-ஏற்றம். V-நேர்விரைவு)

magnetic induction - காந்த தூண்டல்: புறக்காந்தப் புலத்தினால் ஒரு பொருளைக் காந்த மாக்குதல்.( இய)

magnetic meridian - காந்தமைய வரை: நில்வுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்கு