பக்கம்:அறிவியல் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amp

24

ana


இதனைச் செய்யுங்கருவி. மின்பெருக்கி. (இய)

amplifier - மின்பெருக்கி: பா. amplification. (இய)

amplitude - வீச்சு: அலைப்பண்புகளில் ஒன்று. (இய)

amplitude modulation - வீச்சுப் பண்பேற்றம்: வானொலிச் செலுத்துகையில் எளிய வகைப் பண்பேற்றம். (இய)

ampulla - கோளப் பிதுக்கம்: செவி அரைவட்டக் குழலின் படல நீட்சி, குடுவை போன்றது. (உயி)

amylase - அமைலேஸ்: கணைய நொதி. மாவுப்பொருள் எனும் ஸ்டார்ச்சை சர்க்கரையாக்குவது. (உயி)

anabolism - வளர்மாற்றம்: வளர்சிதைமாற்றத்தின் ஆக்க நிலை. இதில் திசுக்கள் முன்கணியத்தால் உண்டாக்கப்படுகின்றன. எ-டு. தன்வயமாதல் அதாவது, செரித்து உறிஞ்சப் பட்ட உணவு திசுவதால். பா. metabolism. (உயி)

anaemia - குருதிச் சோகை: குருதியில் சிவப்பணுக்கள் குறைவதால், முதன்மையாக இரும்பூட்டம் இல்லாத நிலை, சோர்வு ஆகியவை இதன் குறிப்பிடதக்க இயல்புகள். (உயி)

anaerobe - காற்றுப்பருகா உயிரி: தான் வாழ காற்றுத்தேவை இல்லாத உயிர். அதாவது உயிர்வளி தேவையில்லை எ.டு. சில குச்சியங்கள். ஒ. aerobe. (உயி)

anaerobic respiration - காற்றுப்பருகா மூச்சு: ஈஸ்ட் குச்சியங்கள், தசை முதலியவற்றில் நடைபெறும் மூச்சு. கரிமப் பொருள் முழுவதும் உயிர்வளி ஏற்றம் பெறுவதில்லை ஆகவே, உண்டாகும் ஆற்றலும் குறைவு. ஒ. aerobic respiration. (உயி)

anaesthesia- உணர்வகற்றல்: வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம். (மரு)

anaesthetics - உணர்வகற்றிகள்: அறுவையின் பொழுது வலியை நீக்கும் மயக்க மருந்துகள் எ-டு: கொக்கேன், குளோரோபாம். (மரு)

anaesthetist - உணர்வகற்றுநர்: மயக்க மருத்து மூலம் வலியை நீக்கும் மருத்துவர். (மரு)

anal glands - கழிவாய்ச் சுரப்பிகள்: ஆசனவாய்க்கருகிலுள்ள புறப்படைச் சுரப்பிகள். (உயி)

analogous organs - ஒப்புமை உறுப்புகள்: பற்றுக் கம்பிகள் தோன்றிய நிலையில் வேறுபட்டாலும், அவற்றின் வேலை ஒன்றே. பாசிபுளோரா, பட்டாணி ஆகிய தாவரங்களில் பற்றி ஏறுதலே பற்றுக்கம்பிகளின் வேலை. (உயி)

analogous processes - ஒப்புமை முறைகள்: அசையாப் படங்கள், கேள்விளைவுகள், உருப்பதிவுப் படப்பிடிப்புகள் முதலிய எல்லாம் சேர்ந்து பன்ம ஊடகங்