பக்கம்:அறிவியல் அகராதி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

meg

262

Men


சிதலகத்தைத் தாங்குவது. எ-டு. செலாஜினல்லா.

megaton bomb - மெகாடன் குண்டு: அனுப்போர்க்கருவி. வெடிதிறன் 4 x 1015 ஜூல்களுக்கு இணையானது. (ஒரு மில்லியன் டன் டிஎன்டி) (இய)

megger - காப்பறிமானி: இது மின்காப்புப் பொருளின் தன்மையை ஆராயப் பயன்படுவது. இதில் ஒர் ஒம் மானியும் கையடக்க மின்னியக்கியும் உள்ளன. இயக்கி உண்டாக்கும் மின்சாரத்தைக் கொண்டு மின்தடையின் அளவை ஓம்மானியின் மூலம் அளக்கலாம். இதனால் காப்பிடல் போதுமானதா என்பதை அறியலாம். பழுதடைந்த மின்காப்புகளைக் கண்டறியவும் இக்கருவி பயன்படுவது. (இய)

megohm - மெகாஓம்: ஒரு மில்லியன் ஓம். (இய)

meiosis - குன்றல் பிரிவு: கண்ணறைப்பிரிவில் ஒருவகை. இதில் நிறப்புரிகள் இரும நிலையிலிருந்து (2n) ஒருமநிலைக்கு (n) குறைக்கப் படுகின்றன. பா. mitosis.

melting - உருகல்: வெப்பம் அல்லது அழுத்தத்தினால் திண்மம் நீர்மமாதல். உருகுநிலை என்பது திண்ணமமும் நீர்மமும் இணைந்திருக்கும் வெப்பநிலை. (இய)

membrane - படலம்: கண்ணறை, உறுப்பு முதலியவற்றைச் சூழ்ந்துள்ள திசு. ஒரு சில பொருள்களையே ஊடுருவ விடும். எ.டு. கண்ணறைப்படலம், கணிமப் படலம் (உயி)

membrane bone - படல எலும்பு: இணைப்புத்திகவால் உண்டாவது குருத்தெலும்பு பங்கு பெறுவதில்லை. (உயி)

memory - 1. நினைவாற்றல்: பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவில் இருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். (உயி) 2. நினைவகம்: தகவல் சேமிக்கப்படும் கணிப்பொறிப் பகுதி.

mendelevium - மெண்டலிவியம்: Md. கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஓரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

Mendelism - மெண்டலியம்: கால் வழி பற்றி ஜோகன் கிரிகார் மெண்டல் (1822-84) முன்மொழிந்த விதிகள் கொண்டது. அவை பிரிதல் விதியும் ஒதுக்கல் விதியும் ஆகும். (உயி)

Mendel's laws - மெண்டல் விதிகள்: 1. பிரிதல் விதி (லா ஆஃப் செக்ரிகேஷன்) எப்பண்பும் இரு காரணிகளாகவே உள்ளது. இக்காரணிகள் இரண்டும் உடல கண்ணறைகளில் அமைந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே ஏதாவது ஒருபாலணுவுக்குச் செல்வது.