பக்கம்:அறிவியல் அகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

men

263

mer


2. ஒதுக்கல் விதி (லா ஆஃப் இண்டிபெண்டண்ட் அசார்ட்மெண்ட்) இக்காரணிகளின் பரவல், வரம்பிலா முறையில் உள்ளது. காரணி இணைகள் பலவற்றைக் கருதும்பொழுது, ஒவ்வொரு இணையும் தனித்துப் பிரிவது அல்லது ஒதுங்குவது. மெண்டலின் பண்புகள் தற்காலத்தில் மரபணுக்கள் என்று கூறப்பெறுகின்றன.

meninges - முப்படலங்கள்: மூளையையும் தண்டுவடத்தையும் மூடியுள்ள மூன்று படலங்கள். அவை யாவன.

  1. சிலந்திப்படலம் (அரக்னாய்டு)
  2. வன்படலம் (டியுராமேட்டர்)
  3. இளம்படலம் (பயாமேட்டர்)

meningitis - முப்படல் அழற்சி: முப்படல வீக்கம். நினைவுக் குலைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள். (உயி)

meniscus - பிறைத்தலம்: பரப்பு இழுவிசையால் ஒரு குழாயிலுள்ள நீர்மத்தில் தோன்றும் குழி அல்லது குவி வடிவ மேற்பரப்பு. நீருக்குக் கீழமைந்தும் பாதரசத்திற்கு மேலமைந்தும் இத்தலமிருக்கும். (இய)

menopause - விலக்கு நிற்றல்: 40 வயதில் பெண்களிடம் வீட்டு விலக்கு ஓய்தல். (மரு)

mensuration - வடிவ அளவியல்: அளவுகளைப் பற்றி ஆராய்தல். அதாவது, பொருள்களின் நீளம், பரப்பு, பருமன் முதலியவற்றை அளவையினாலும் கணக்கீட்டினாலும் காணல். (இய)

mental hygiene - உளநலனியல்: தசைக்கேடுகளை நீக்கி உளப் போராட்டங்களைத் தவிர்க்க உதவும் செயல்முறைகளை ஆராயும் நடைமுறை உளவியல் பிரிவு. (உயி)

mercury - பாதரசம்: Hg, வெண்ணிறம். நீர்மம் நிலையில் உள்ள ஒரே கனஉலோகம். இங்குலிகத் தாதுவிலிருந்து கிடைப்பது. பளுமானி, அழுத்தமானி, வெப்ப நிலைமாணி ஆகியவற்றில் நிரப்பும் நீர்மம். பல்மருத்துவத்தில் பயன்படுதல், புற ஊதாக் கதிரின் மூலமாகும். (வேதி)

Mercury - புதன்: கதிரவன் குடும்பப் பெருங்கோள்களில் சிறியது. அமெரிக்க மெரைனர். 10 இதனை நன்கு ஆராய்ந்துள்ளது. (வானி)

mercury lamp - பாதரச விளக்கு: குமிழிலுள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீலநிற ஒளியைத் தரும் விளக்கு புற ஊதாக்கதிர்வீச்சு நிறைந்த ஒளி. மருத்துவத்தில் பயன்படல். ஆவி விளக்கு (இய)

mericarp - பகுதிக்கனி: கனியின் ஒருவிதப் பகுதி. பல்பிளவுறு கனியில் காணப் படுவது. எ-டு: கொத்துமல்லி, பா. fruit. (உயி)

meridian - மையவரை: புவிமுனைகள் வழியே அமையும் கற்பனைப் பெருவட்டம். (பு.அறி)