பக்கம்:அறிவியல் அகராதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

met

265

met


metabolism - வளர்சிதைமாற்றம்: ஓர் அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம், சிதைமாற்றம் என்னும் இருநிலைகளைக் கொண்டது. வளர்மாற்றம் ஆக்கநிலை கொண்டது. உணவு தன்வயமாகித் திசு வளர்தல் எடுத்துக்காட்டு, சிதைமாற்றம் அழிவு நிலை. உயிர்வளி ஏற்றம் திசுக்களில் நடைபெறுவதால், ஆற்றல் உண்டாதல் எடுத்துக் காட்டு. வளர்சிதை மாற்றத்தில் உட்படும் பொருள் வளர்சிதை மாறி (மெட்டபோலைட்) ஆகும். இது வினைப்படு பொருளாகவோ விளை பொருளாகவோ இருக்கும். (உயி)

metacarpals - அங்கை எலும்புகள்: மணிக்கட்டோடு விரல்களை இணைக்கும் கையின் 5 எலும்புகள். (உயி)

metacarpus - அங்கை: உள்ளங்கை எலும்புகள் கொண்டது. (உயி)

metal composites - உலோகத் தொகுவைகள்: இவை கலவைகள். இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்கள் வார்ப்பியப் பொருளில் இருக்கும். துத்தநாகம், காரீயம், அலுமினியம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை உருவாக்கப்படடுள்ளன. (1993)

metalloid - உலோகப்போலி: உலோகப் பண்பையும் அலோகப் பண்பையும் பெற்றிருப்பவை. எ-டு. சவ்வீரம், அண்டிமணி, டெல்லூரியம். (வேதி)

metallurgy - உலோகவியல்: தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை ஆராயுந்துறை. (வேதி)

metamorphosis - வளர்உரு மாற்றம்: முட்டைப் பருவத்திலிருந்து (வெளிவந்த வேற்றிளரியிலிருந்து) முதிர்ச்சிப் பருவத்திற்கு முன்வரை நடைபெறும் மாற்றங்கள் இதில் அடங்கும். எ-டு. தலைப்பிரட்டை தவளையாதல், கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாதல். (உயி)

'metaphase - நடுநிலை: இழைப் பிரிவு அல்லது குன்றல் பிரிவில் நிறப்புரிகள் கதிரின் நடுக்கோட்டுத் தளத்தில் அமைதல். உயிரணுப்பிரிவில் இரண்டாம் நிலை. (உயி)

metazoa - மெட்டாசோவா: பின் தோன்றிகள். பல்கண்ணறை (செல்) விலங்குகள். உடல் பல கண்ணறைகளாலானது. புரோட்டோசோவா (முதல் தோன்றிகள்) பாராசோவா (இணைப்புத் தோன்றிகள்) கடற்பஞ்சுகள் நீங்கலாக ஏனைய எல்லா விலங்குகளையும் இவ்வுள்ளினம் கொண்டது. (உயி)

meteor - விண்கொள்ளி: விண்ணிலிருந்து ஒளிர்வுடன் விழும் பொருள். தரையில் விழும் பொழுது விண்கல்லாக மாறுவது. வானவெளிப்பயணத்திற்குத் தடையாக இருப்பது. (வான்)

meteorology - வானிலை இயல்: வானிலை பற்றி ஆராயுந்துறை.