பக்கம்:அறிவியல் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ana

25

ang


களின் மாயத்தை உருவாக்குபவை. (தொ. து)

analogy - வேலை ஒப்புமை: உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல் எ-டு. பறவைச் சிறகுகளும், பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டுமே. தோற்றத்தில் இல்லை. ஒ.homology. (உயி)

analysis - பகுப்பு: ஒரு மாதிரியின் பகுதிப்பொருள்களை உறுதி செய்யும் முறை. இது இருவகைப் படும். 1 பருமனறிபகுப்பு: அது என்ன? என்னும் வினாவிற்கு விடையளித்தல் 2. அளவறிபகுப்பு: இப்பகுதியின் எவ்வளவு பொருள் அதில் இருக்கிறது? என்னும் வினாவிற்கு விடையளித்தல். (வேதி)

anandrous - தாளற்ற: மகரந்தத் தாள்கள் இல்லாத பூக்கள். (உயி)

anaphase - பின்னிலை: இழைப் பகுப்புக் கண்ணறைப் பிரிவில் ஒரு வகை. மூன்றாம் நிலை. இதைப் பிரிநிலை என்றும் கூறலாம். பா. cell division. (உயி)

anastomosis - குழாய்வாய் இணைப்பு: இரண்டிற்கும் மேற்பட்ட குழாய்கள் சேர்தல். தமனிகள், சிரைகள் அல்லது மற்றக் குழாய்கள் சேர்வதால் தொடர்பு வழி உண்டாதல். (மரு)

anatomy - உள்ளமைவியல்: உயிர்களைப் பிளந்து பார்க்க உள்ளே தெரியும் உறுப்புகளை ஆராயுந்துறை. மருத்துவத்தில் சிறப்பு உடையது. (உயி)

androecium - மகரந்த (பூந்து) வட்டம்: மகரந்தத்தாள், மகரந்தப்பை முதலியவற்றைக் கொண்ட பூவின் மூன்றாம் வட்டம். பயனுறு உறுப்பு. ஒ. gynoecium. (உயி)

anemometer - காற்றுமானி: காற்று விளைவை அளக்கப் பயன்படுங்கருவி. (இய)

anemophily - காற்றுக் கவர்ச்சி: தாவரங்களில் காற்றினால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை எ-டு: நெல், தென்னை. (உயி)

aneroid barometer - நீர்மமிலாப் பாரமானி: பாரமானியில் ஒருவகை. எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். நெம்புகோல் அடிப்படையில் வேலை செய்வது காற்றழுத்தத்தை அளக்க உதவுவது. (இய)

angiospermae - விதைத் தாவரங்கள்: இவற்றில் சூல்பையில் விதைகள் அமைந்திருக்கும். மா, பலா. (உயி)

angle of incidence - படுகோணம்: படுகதிருக்கும் செங்குத்துக் கோட்டுக்கும் இடையில் உள்ள கோணம் (இய)

angle of momentum - கோண உந்தம்: ஒரு பொருளின் கோண நேர் விரைவு, சுழலச்சில் அதன் நிலைமம் ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை. L= lω. L-கோண உந்தம் l-நிலைமைத் திருப்புத்திறன் ω-கோண நேர்விரைவு. (இய)