பக்கம்:அறிவியல் அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mic

268

mid


சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவில்லை என இரு குவி வில்லைகளைக் கொண்டது. பெருக்குந்திறன் அதிகம். 3. மின்னணு நுண் ணோக்கி: ஒரு போக்குக் கற்றை மின்னணுக்களைப் பயன்படுத்துவது. உருப்பெருக்கம் 2,50,000 தடவைகள். இது கண்டுபிடிக்கப்பட்ட பின் அறிவியலின் பல துறைகளும் குறிப்பாக உயிரியல் விரைவாக வளர்ந்தன. 4. புற ஊதாக்கதிர் நுண்ணோக்கி: புற ஊதாக்கதிர்கள் பயன்படுத்தப் படுகின்றன. படிக வில்லைகள் பயன்படுதல். ஒளிப்பட முறையில் உருப்பதிவு செய்யப்படுகிறது. உருப்பெருக்கம் 1,500 தடவைகள்.

microsomes-நுண்புரிகள்:கோல் கை உறுப்பு. அகக்கணிய வலைப் பின்னல் ஆகியவற்றின் துண்டுகள். (உயி)

microsporangium - நுண்சிதலகம்: பெரணித் தாவரங்களிலுள்ள சிதலியம், நுண்சிதல்களை உண்டாக்குவது. இது நுண்சிதல் இலையில் உள்ளது. எ.டு. செலாஜினெல்லா (உயி)

microspore-நுண்சிதல்: வேற்றகச் சிதல் தாவரங்களில் குன்றல் பிரிவுக்குப்பின் இரு சிதல்கள் தோன்றுகின்றன. ஒன்று பெருஞ்சிதல், மற்றொன்று நுண்சிதல் அல்லது சிறுசிதல்

micro sporophyll - நுண்சிதல் இலை: மாற்றுரு பெற்ற இலை, இதில் நுண்சிதலகம் இருக்கும். தனி நுண்சிதல் இலைகள் என்பவை உறையில் விதையில்லாத் தாவரங்களின் ஆண் கூம்புகளிலும் லைக்கோபாடுகளின் செழிப்பான ஒளிச்சேர்க்கை இலைகளிலும் காணப்படும் செதில்களே. உறையில் விதையுள்ள தாவரங்களின் மகரந்தத் தாள்கள் மாற்றுரு பெற்ற நுண்சிதல் இலையே. பா.

microtome - நுண்வெட்டி: நுண்ணாய்விற்காக இலை, திசு தண்டு முதலிய பகுதிகளை மெல்லிய சீவல்களாக வெட்டுங்கருவி. உயிரியல், மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுவது. (உயி)

microvilli - நுண்விரலிகள் : கணிமப் படலத்தின் நீண்டதும் நொய்ந்ததுமான நீட்சிகள் சுரப்பணுக்களிலும் உறிஞ்சணுக் களிலும் காணப்படுபவை. (உயி)

microwaves - நுண்ணலைகள்: கம்பியிலாத் தொடர்பில் பயன்படும் மிகக் குறுகிய அலைகள். வெளிநாட்டு ஒலிபரப்புக்கு மட்டும் பயன்படுபவை. (இய )

mid brain, mesencephalon - நடுமூளை மூளையின் மூன்று அடிப்படைப் பிரிவுகளில் ஒன்று. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது. ஒ. fore brain, hind brain (உயி)