பக்கம்:அறிவியல் அகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mit

271

mod


அல்லது ஏவப்படும் கருவி அல்லது கருவித்தொகுதி அழிவை உண்டு பண்ண ஏவப்படுவது. வில், வேல், அம்பு, குண்டுகள், ஏவுகணைகள் முதலியவை எடுத்துக்காட்டுகள். வளைகுடாப்போரில் (1991) அமெரிக்க ஏவுகணை பேட்ரியட் ஈராக் ஏவுகணை ஸ்கட்டைத் (உருசியா உருவாக்கியது) தகர்த்தது. பா. rocket, satellite.(இய)

Mitscherlich's law -மிட்சர்லிச்சு விதி: ஓரகச் சீரிய விதி : ஓரக வடிவங்களில் படிகமாகும் பொருள்கள். ஒத்த வேதி இயைபுகளைக் கொண்டவை என்பது விதி. இவ்விதியை சேர்மங்களின் வாய்பாட்டைச் சுட்டிக் காட்டப் பயன்படுதல். (வேதி)

mitochondria -இழையன்கள்: இழை உரு உள்ளவை. உயிரணுவில் காணப்படும் மூச்சு மையங்கள். (உயி)

mitosis இழைப்பிரிவு: கண்ணறைப் பிரிவில் ஒருவகை. இதில் உட்கரு மறைமுகமாகப் பிரிகிறது. இது தாவரத்தின் வளர்ச்சிப் பகுதிகளான தண்டு முனையிலும் வேர்முனையிலும் நடைபெறுவது. இதில் வலைப்பின்னலை உடைய உட்கரு பல தொடர்ந்த மாற்றங்களை அடைகிறது. அவ்வாறு நடைபெறும் மாற்றங்கள் பின்வரும் நான்கு நிலைகளில் அடங்கும். 1. முதல்நிலை (புரோபேஸ்) 2. நடுநிலை (மெட்டாபேஸ்) 3. பின்னிலை (அனபேஸ்) 4. முடிவுநிலை (டிலோபேஸ்), பா.meiosis (உயி)

mitralvalve-ஈரிதழ் திறப்பி: இரு படலமடிப்புகளைக் கொண்டது. இதயத்தின் இடது மேலறைக்கும் கீழறைக்கும் நடுவே அமைவது. கீழறைக்குக் குருதியைச் செலுத்துவது. கீழறை சுருங்கும்பொழுது முடிக்கொள்வது. இதனால் மேலறைக்குக் குருதி செல்ல இயலாது. ஒ.tricuspid valve.(உயி)

mixture - கலவை: இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வீத அளவு மாறிச் சேர்ந்தது. தகுந்த இயற்பியல் முறைகளால் இதிலுள்ள பகுதிகளைப் பிரிக்கலாம். எ-டு. உப்புக் கரைசலை ஆவியாக்க, நீர் ஆவியாகும், உப்பு கிண்ணத்தில் தங்கும். (வேதி)

MKS System-.எம்.கே.எஸ் முறை: மீட்டர், கிலோகிராம், வினாடி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அலகுமுறை. எஸ்.ஐ அலகுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. பா. metric system (இய)

moderator -சீராக்கி: அணுக்கரு உலைகளின் உள்ளகங்களில் விரைவாகச் செல்லும் அல்லணுக்களின் விரைவைக் குறைக்கப் பயன்படும் பொருள். நீர், கரிக் கோல், பாரமின் மெழுகு பெரிவியம் முதலியவை குறைப்பிகள் ஆகும். (இய)

modernisation -காலத்துக்கேற்ற தாக்குதல்: நவீனமாக்குதல்