பக்கம்:அறிவியல் அகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mot

277

mul


Motorola - மோட்டோரோலா: இஃது ஓர் அயல்நாட்டுச் செயற்கை நிலா நிறுவனம். இது தன் இரிடியத் திட்டத்தின் மூலம் 66 நிலாக்களை ஏவி, உலக அளவில் வாணிப முறையில் செய்தளிக்கத் திட்டமிட்டுள்ளது. (1994)

mould - பூஞ்சணம்: பூஞ்சை இனத்தைச் சார்ந்தது. உணவுப் பொருள்களிலிருந்து படிந்து வாழ்வது. ரொட்டிப் பூஞ்சணம் (உயி)

moult - தோலுரித்தல்: தோலி, செதில்கள், இறகுகள் முதலியவை உதிர்தல். (உயி)

mouth - வாய்: உணவு வழியின்முன்திறப்பு (உயி)

mouthparts - வாய்ப்பகுதிகள்: கணுக்காலியின் தலையிலுள்ள இணைந்த உறுப்புகள். உணவைப் பெறப் பலவழிகளில் மாற்றுரு பெற்றிருக்கும். அவை மேலுதடு (லேப்ரம் ). 1.மேல்தாடைகள் (மேண்டிபிள்) 2. கீழ்த்தாடைகள் (மேக்சிலே) 3. கீழுதடு (லேபியம்) 1 ஆகியவை ஆகும். (உயி)

movement-இயக்கம்: 1. விலங்கில் ஏற்படும் இடநகர்ச்சி, 2.தொண்டு, கட்சி சார்ந்த அமைப்பு (ப.து)

mucilage - 3 சளிமம்: விதை, பட்டை, வேர் முதலியவற்றிலிருந்து உண்டாகும் தாவரப் பொருள். குளிர்ச்சியாலும் வெப்பத்தாலும் இதைப் பெறலாம். (உயி)

mucous membrane - சளிமப்படலம் படலம்: குடல்வழி, மூக்குவழி. (உயிர)

mucus - சளிமம்: கோழைப்பொருள். சளிமப்படல அணுக்களால் சுரக்கப்படுவது. பாகு போன்றது. கரையாதது, கிளைகோபுரத்தாலானது. தான் சுரக்கும் பரப்பைப் பாதுகாப்பதும் உயவிடுவதும் ஆகும். (உயி)

mule - கோவேறு கழுதை: ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினம் (உயி)

multicellular- பல் கண்ணறைகள் கொண்ட: உடல் பல உயிரணுக்களாலானது. எ-டு: கடற்பஞ்சு, அய்டிரா (உயி)

muticentre-பல்மையப் பிணைப்பு: இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களின் (வழக்கமாக3) சுற்றுவழிகள் ஒன்றின் மீது மற்றொன்றுபடுவதால் உண்டாகும் இரு மின்னணுப் பிணைப்பு. (வேதி)

multimeter - பன்னிலை மானி: மின்னோட்டம், மின்தடை, மின்னழுத்தம், முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி. (இய)

multiennials -பல்லாண்டு வாழ்விகள்: இவை பல ஆண்டுகள் வாழ்ந்து தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் பூப்பவை. ரயில் கற்றாழை, தாளிப்பனை. (உயி)

multimedia - பன்ம ஊடகங்கள்: பல தகவல்களை அளிப்பவை. ஒலி, ஒளி வழி அமைபவை.