பக்கம்:அறிவியல் அகராதி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myo

281

nad

அடைப்பு, திராம்பின் உண்டாதல் முதலிய காரணிகளால் இந்நிலை ஏற்பட்டுத் தசையுறை அணுக்கள் இறப்பதால், இறப்புப் பகுதி தோன்றும். (மரு)

myocaridial ischemia - இதயத் தசை சோகை: குருதிக்குழாய்ச் சுருக்கத்தினால் தசை உறையின் ஒரு பகுதிக்குக் குருதி செல்வதால் குறைவு உண்டாதல். (மரு)

myocardium - இதயத் தசை உறை: இதய உள்ளுறை அணுக்களிலிருந்து உண்டாகும் இதயத் தசை உறை. (உயி)

myocyte - தசையணு: தசையிலுள்ள அணு(உயி)

myograph-தசை வரைவி: தசைச் கருக்கங்களைப் பதிவு செய்யுங் கருவி. (உயி)

myology -தசை இயல் :தசைகளை ஆராயுந்துறை.(உயி)

myotma - தசைக்கட்டி: தசைத்திசுவுள்ள கட்டி (மரு

myomere - தசைவட்டு: தசைத் துண்டு.(உயி)

myoneme - தசைச்சுருங்கிழை:விலங்குக் கண்ணறைக் கணியத் தில் சைட்டோ பிளாசத்தில்) காணப்படும் சுருங்குஇழை (உயி)

myope - கிட்டப்பார்வையாளர்: அருகிலுள்ள பொருள்களை மட்டும் பார்க்குந் திறனுள்ளவர். (உயி)

myrioscope - பல்லுருக்காட்டி:பா.kaleidoscope.(இய)

myxobacteria - சளிக்கியங்கள்:கோல்வடிவ நுண்ணியங்கள். இவற்றின் வழுக்கியக்கம் சிறப்பானது. உயிரணுச் சுவர் நீட்சி உடையது. (உயி)

myxoedema - சளியழற்சி: தொண்டைச் சுரப்பி (தைராய்டு) சுரப்பு குறைவதனால் உண்டாகும் நோய், மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு எடை மிகுதல், உளச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக் குறைவு ஆகியவை இதன் அறிகுறிகள்.(உயி)

myxomatosis-கட்டியழற்சி: வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய். (உயி)

N

NACO, National AIDS Control Organization. நேக்கோ: தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு. இந்திய நிறுவனம்.

nacre-முத்துக்கரு:முத்தைத்தரும் தாய்க்கரு (உயி)

macrolepsy - நாட்துயில்: ஒரு நோய் அல்லது குறைபாடு. பகலில் தூங்க விரும்பும் உந்தல், அடக்க இயலாதது. (உயி)

nadir - சிறுமம்: விண்கோளத்தில் உச்சிக்கு நேர் எதிராக அமையும் புள்ளி. ஆகவே எதிர்நிலைப் புள்ளி. (வானி)