பக்கம்:அறிவியல் அகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nit

292

nod



நீர்மம், அடர் நைட்டிரிகக் காடி, கந்தகக்காடி ஆகியவை சேர்ந்த குளிர்கலவையில் கிளைசராலை மெல்லியதாக ஒடச்செய்ய, இப்பொருள் கிடைக்கும். டைனமைட்டின் ஒரு பகுதிப் பொருள். (வேதி)

nitrometer - நைட்ரோமானி: நைட்ரஜனையும் அதன் சேர்மங்களையும் மதிப்பிடுங் கருவி. (வேதி)

Nobel prizes - நோபல் பரிசுகள்: ஸ்வீடிஷ்நாட்டு அறிவியலார் ஆல்பிரட்டு நோபல் (1833-96) என்பவரால் தொடங்கப்பட்டவை. வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிவியலாருக்கு அளிக்கப்படு பவை. 1969இல் பொருளியலும் சேர்க்கப்பட்டது. 1913இல் இலக்கியத்திற்குத் தாகூரும் 1930இல் இயற்பியலுக்கு சி.வி. இராமனும் 1968இல் அரிகோவிந்து கொரோனோ மருத்துவத்திற்கும் 1979இல் அன்னை தெரசா அமைதிக்கும் 1983இல் சுப்பிரமணியம் சந்திரசேகர் இயற்பியலுக்கும் அமர்த்தியா சென் பொருளியலுக்கும் நோபல்பரிசு பெற்ற இந்தியப் பெருமக்கள். (ப.து.)

nobellium - நோபலியம்: கதிரியக்க உலோகம். ஜிராசோ, சீபாக் ஆகிய இருவரும் 1966இல் இதை இனங் கண்டறிந்தனர். மாற்றுப் பெயர் உன்னில்பியம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல சேர்மங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன. (வேதி)

noble gases - பெரும்பேற்று வளிகள்: ஒரணுவும் செயல் திறனும் கொண்டவை. எ-டு. ஆர்கன், ஈலியம், நியான், கிரிப்டான், செனான், ரேண்டன், சிறு அளவுகளில் காற்று வெளியில் உள்ளவை. (வேதி)

noble metals - பெரும்பேற்று உலோகங்கள்: பெரன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை. இவை அரிமானத்திற்குட்படா, காற்றில் பளபளப்பு குறையா, நீரிலும் கரையா. காடிகளும் எளிதில் கரைக்க இயலா இவற்றை மேல் உலோகங்கள் என்றும் கூறலாம். இவற்றிற்கு நேர் எதிரானவை கீழ் அல்லது அடி (பேஸ்மெட்டல்ஸ்) உலோகங்கள் ஆகும். எ-டு. செம்பு, காரீயம், துத்தநாகம். (வேதி )

noctambulation - தூக்கத்தில் நடத்தல்: ஒர் உளவியல் குறைபாடு பா. somnambulism. (உயி)

nocturia - இரவு நீர்க்கழிவு நோய்: சிறுநீரக நோய். சிறுநீரக அதிகம் கழிவதால், இரவில் தூக்கம் வராதநிலை. (உயி)

node - கணு: 1. நிலையான அலைக் கோலத்தில் அதிர்வு குறைவாக இருக்கும் புள்ளி. ஒ. antinode. 2. தண்டில் இலை இணைந்துள்ள இடம், உப்பி இருக்கும். (ப.து)