பக்கம்:அறிவியல் அகராதி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nyl

297

occ


பொட்டாசியம் அய்டிராக்சைடு, பிஸ்மத் துணை நைட்ரேட்டு ஆகியவை கரைந்த கரைசல். சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுதல். (வேதி)

nylon - நைலான்: தொகுப்புப் பலடிபயின் ஒருவகை. சிறந்த முதல் செயற்கை இழை. குதி குடை, துரிகை, கயிறு, நீச்சல் உடை முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

nymph முழுஇளரி: வேற்றக உருமாற்றங் கொண்ட பூச்சிகளின் இளம்நிலை (உயி)

nymphomania - மீச்சிற்றின்ப வெறி: பெண்ணிடத்து ஏற்படும் மட்டுமீறிய கலவி விருப்பம். (உயி)

nystagus - தன்னிமைத்தல்: தாமாகக் கண்ணிமைகள் அசைதல் (உயி)

O

obesity - கொழுமை: இது ஒரு நோய் நிலைமை, தோலடியில் அளவுக்கு மீறிக் கொழுப்பு சேர்வதால், உடல் எடையிலும் பருமனிலும் பருக்கும். இந்நிலை நீரிழிவு நோயில் முடியும். (உயி)

object - 1. பொருள். 2. நோக்கம்.

objective - குறிக்கோள்: 1. அடையும் எல்லை. 2. பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கியில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லை. இது வில்லையாகவோ வில்லைத் தொகுப்பாகவோ இருக்கும். (ப.து.)

obligato parasite - கட்டாய ஒட்டுண்ணி: சார்ந்துள்ள உண்ணி. தனித்து வாழ இயலாதது. எ-டு. ஈரல் புழு, நாடாப்புழு. (உயி)

oblique - சாய்வடிவம்: பிகோனியா இலை. (உயி)

oblong - நீள்சதுர வடிவம்: (உயி)

obovate - தலைகீழ் முட்டை வடிவம்: வாழை இலை. (உயி)

obturator foraman - இடுப்பெலும்புத் துளை: இடுப்பு வளையத்தில் இடுப்பு முன் எலும்பு. இடுப்புப்பக்க எலும்பு ஆகியவற்றிற்கிடையே உள்ள துளை. (உயி)

occipital condyle - பிடரிமுண்டு: மண்டை ஒட்டுக்குப் பின்னுள்ள குமிழ்எலும்பு, முதல் முள் எலும்புடன் அசைவது. (உயி)

occipital lobes - பிடரிக்கதுப்புகள்: பெருமூளை அரைத்திரள்களின் பின்பகுதி. (உயி)

occipital vertebrae - பிடரிமுள் எலும்புகள்: மண்டைக்கூட்டு வளர்ச்சியின் பொழுது, முதுகு நானுக்குப் பின்னர் வளரும் குருத்தெலும்புகள். பின், இவை மண்டைக் கூட்டோடு ஒன்றாகும். கூடு, சட்டகம் என்பவை ஒரே பொருள் தருபவை. (உயி)

occlusion - 1. தாழ்தல்: முன்கூடும் நார்கள் பின் கூடும் நரம்பன்களோடு (நியூரான்ஸ்) சேர்வதால், எதிர்பார்த்த துலங்கலில்