பக்கம்:அறிவியல் அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ano

28

ant


நிலை உயரும் பொழுது நீர்மத்தின் அடர்த்தி குறையும். இருப்பினும் நீர் மட்டும் முரண்படு நடத்தையுள்ளது. -0.4° செ.க்கு இடையில் வெப்பநிலை உயர்விற்கேற்ப அடர்த்தி அதிகமாகும். (இய)

anomaly - முரண்படு கோணம்: நீள்வட்டச் சுற்று வழியிலுள்ள கோள் ஒன்றின் நிலையை உறுதி செய்யப் பயன்படுங் கோணம். (வானி)

antacid - நடுநிலையாக்கி: காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட் (வேதி)

ants - எறும்புகள்: சமூகப்பூச்சிகள், சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. மிகக் குறுகிய வயிறு சுருக்கத்தைக் கொண்டது. வீட்டுத் தொற்றுயிர்கள். (உயி)

antennae-உணரிகள்: 1. தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள் (உயி) 2. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் அலைகளைப் பெறும் பகுதிகள். (இய)

anterior - முன்புறம்: முன்முனை (பூ, தலை). அடிப்பக்கம், வயிற்றுப் பக்கம், (மனிதன்) ஒ. dorsal, posterior, ventral. (உயி)

anther - மகரந்தப்பை: பூந்துப்பை, மகரந்தத்தாளுக்கு மேலுள்ள பகுதி. மகரந்தத்துளை உண்டாக்குவது. இத்துளில் ஆண் அணுக்கள் இருக்கும். (உயி)

antheridium - ஆணியம்: பாசிகள், மாசிகள், பெரணிகள் ஆகிய தாவரங்களில் காணப்படும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. இது ஆண் அணுக்களை உண்டாக்குவது. ஒ. archegonium. (உயி)

anthocyanin - ஆந்தோசையனின்: குளுகோசைடு என்னும் தாவர நிறமி. (உயி)

anthophore - பூத்தாங்கி புல்லி வட்டத்திற்கும் அல்லி வட்டத்திற்கும் இடையே பூத்தளம் நீட்சியடைதல். (உயி)

anthotaxy - பூவமைவு: பா. inflorescence. ஒ. phyllotaxy. (உயி)

anthracene - ஆந்தரசின்: C14H10 வெண்ணிறப்படிகம். சாயங்களை அளிப்பது. (வேதி)

anthracite - அனல்மிகு நிலக்கரி: இதில் கரி 95%. தீச்சுடர் புகையின்றி எரிந்து, அதிக வெப்பத் தைத்தரும் எரிபொருள். நிலக்கரியின் மூன்று வகைகளுள் ஒன்று. ஏனைய இரண்டு பழுப்பு நிலக்கரி, பொது நிலக்கரி. (வேதி)

antibiosis - உயிர் எதிர்ப்பு வாழ்வு: உயிரிகளுக்கு இடையேயுள்ள இயைபு, அவற்றில் ஒன்றிற்குத் தீங்காக அமைதல். இது ஒரு தடையே. பா. symbiosis. (உயி)

antibiotics - உயிரி எதிர்ப்பிகள்: கரிமச் சேர்மத் தொகுதிகள். அமைப்பில் வேறுபடுபவை. நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. ஏனைய நுண்ணுயிரிகளின் செயல்களைத் தடை