பக்கம்:அறிவியல் அகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

olf

300

onp


olfactory nerve - முகர்நரம்பு: முதல் மூளை நரம்பு. முகர் படலத்தில் தொடங்கி மூளை யின் முகர்மடலில் முடிவடைதல். (உயி)

olfactory ventricles - முகர் அறைகள்: முகர்மடல்களாக மாறியுள்ள பெருமூளை அரைத்திரள்களின் இருகுழி நீட்சிகள். (உயி)

oligomer - சிறுபடி: ஒப்பிடத்தக்க வகையில், மூலக்கூறில், சிறிய ஒருபடி அலகுகளைக் கொண்ட பலபடி (வேதி)

ofigotrophic - ஊட்டக்குறை நீர்நிலை: ஏரி, ஊட்டம் குறையின் உற்பத்தியும் குறையும். ஒ. eutrophic. (உயி)

oliguria - சிறுநீர் வீழ்வு: சிறுநீர்ப் பிரித்திகள் பெருமளவில் அழிவதால், சிறுநீர் அளவில் வீழ்ச்சி ஏற்படுதல்,

Olympiadane - ஒலிம்பியாடேன்: ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரெனி வைலர் தொகுத்தது. இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதிகள் தாமாக எவ்வாறு ஒருங்கு சேர்கின்றன என்பதை விளக்க மிகவும் பயனுள்ளது. உடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளை அனுப்ப மருத்துவத்தில் உள்ளார்ந்த மதிப்புள்ளது. 1994)

omasum - மூன்றாம் இரைப்பை: அசைபோடும் விலங்குகளில் இரைப்பை நான்கு பிரிவுகளைக் கொண்டது. முதல் இரைப்பை (ருமன்) இதை அரைவைப்பை எனலாம். இரண்டாம் இரைப்பை (ரெட்டிகுலம்) இதை வலைப்டை எனலாம். மூன்றாம் இரைப்பை, அடுக்குப்பை நான்காம் இரைப்பை (அபோமேசம்). இதுவே உண்மை இரைப்பை பா, abomasum (உயி)

omentum - உட்சூழ்படல மடிப்பு; வயிற்று உள்ளுறுப்பு ஒன்றிலிருந்து மற்றொரு உள்ளுறுப்புக்குச் செல்வது. அடிநடு மடிப்பின் எச்சம். (உயி)

ommatidium - கோல்கண்: கரப்பான் முதலிய பூச்சிகளின் வட்டுக் கண்ணிலுள்ள கோல் வடிவப் பகுதி. தனிக்கண். (உயி)

omnivore - அனைத்துண்ணி: அனைத்துப் பொருள்களையும் உண்ணும் விலங்கு. எ-டு, காகம். இது தாவரப் பொருள் விலங்குப் பொருள் ஆகிய இரண்டையும் உண்பது. (உயி)

oncology - கட்டிஇயல்: கட்டிகளை ஆராயுந்துறை. (மரு)

oncotic pressure - கூழ்ம அழுத்தம்: கணியக் கூழ்மங்களால் (பிளாசம் கொலாய்ட்ஸ்) உருவாகும் கூழ்மப் படல பரவு அழுத்தம். (உயி)

on-position - இயங்ககுநிலை: (மின்சுற்று) போடுநிலை. ஒ. off-position.