பக்கம்:அறிவியல் அகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pal

311

pan


கலன்கள் செய்யவும் பயன்படுவது. (வேதி)

palmate - அங்கை வடிவம்: எலுமிச்சை. (உயி)

palmella - பால்மெல்லா நிலை: கிளமிடோமோனசின் சேயனுக்கள் மீண்டும் மீண்டும் பிரிந்து வடிவமற்ற ஒரு வாழ்தொகுதியை உண்டாக்கும். இதில் ஆயிரக்கணக்கான கண்ணறைகள் எல்லாம் ஒரு பொதுவான இழுது போன்ற வார்மத்தில் பதிந்திருக்கும். இவ்வாறு கண்ணறைகள் திரள்வதற்குப் பால்மெல்லா நிலை என்று பெயர். பால்மெல்லா என்பது ஒர் பாசிச் சிறப்பினம். இதனை இத்திரட்சி ஒத்திருப்பதால் இப்பெயர் பெறலாயிற்று. (உயி)

palmitic acid-பால்மிட்டிகக்காடி: C12H22COOH . மெழுகு போன்ற கொழுப்புக்காடி பனை எண்ணெயிலும் மற்றக் கொழுப்புகளிலும் முப்பால்மிடினாக உள்ளது. இதன் உப்புகள் சவர்க்காரம் உண்டாகக் காரணமாகவுள்ளது. (வேதி)

palmitin, tripalmitin - பால்மிட்டின், முப்பால்மிடின்: C15H31(COO)3., C3H5. பால்மிட்டிகக் காடியின் கிளிசரைடு. கொழுப்பு போன்ற பொருள். பனை எண்ணெய் முதலியவற்றில் உள்ளது. (வேதி)

pancreas - கணையம்: பெரிய செரித்தல் சுரப்பி. இதன் சுரப்பு கணைய நீர். இந்நீர் மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் செரிக்க வைக்கிறது. இந்நீரிலுள்ள நொதிகள் அமிலேஸ், டிரிப்சின், லிபேளப். கணைய நீர் முன்சிறுகுடலுக்குச் செல்கிறது. இச்சுரப்பி இன்சுலினையும் சுரக்கிறது. ஆகவே, இது நாளமுள்ள சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி ஆகிய இரண்டிற்கும் எடுத்துக்காட்டு, பா. (உயி)

pangenesis - ஊக்கணுவாக்கம்: சார்லஸ் தார்வின் முன்மொழிந்த கொள்கை, ஊக்குவிக்கும் அணுக்கள் எல்லா உடல் உறுப்புகளிலிருந்தும் உடல் நீர்மங்களில் கலந்து, இனப்பெருக்க அணுக்களுக்குச் செல்கின்றன. இவை பாலணுக்களை ஊக்குவிக்க, அவை மீண்டும் அடுத்த தலைமுறைக்குரிய பண்புகளை ஊக்குவிக்கின்றன. (உயி)

panicle - கிளையகம்: நெடும் பூக்கொத்தின் ஒருவகை. மா. (உயி)

panmixis -வரம்பில் கலப்பு: வரம்பில்லாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சேர்க்கும் கலப்பு. இது அரிதாக நடைபெறுவது. (உயி)

panther - பெருவேங்கை: பூனைக் குடும்பத்தைச் சார்ந்தது. பெரும் புள்ளிகள் இருக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் காணப்படுவது. (உயி)

panting - பெருமூச்சு விடுதல்: மூச்சுவிடும் நிலை அதிகமாதல். அதிக அளவில் மூச்சுவிடுதல்