பக்கம்:அறிவியல் அகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

рап

312

par


நடைபெறுவதால், நீராவி இழப்பு அதிகமாகி, அதிக வெப்பம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (உயி)

pantoscope - விரிகாட்சி நோக்கி: பரந்த அளவு காட்சியைப் பிடிக்கும் புகைப்படப்பெட்டி அகன்ற கோணமுள்ள புகைப்படவில்லை உண்டு. (இய)

paper chromatography - தாள் நிறவரைவியல்: கரிமச் சேர்மக் கலவைகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படும் நுணுக்கம். இதில் பிரிப்புவிதி பயன்படுகிறது. பா.chromotography (வேதி)

paper-making - தாள் செய்தல்: மூங்கில், வைக்கோல், புல் முதலியவற்றிலிருந்து தாள் கிடைக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் கூழிலிருந்து தாள் செய்யப்படுகிறது. இக்கூழ் சல்பைட்டுமுறை, சல்பேட்டு முறை என்னும் இருமுறைகளில் செய்யப்படுகிறது. இவ்விரு முறைகளில் செய்யப்பட்ட கூழ் மெல்லிய கம்பி வலையின் மீது சமமாகப் பரப்பப்படுகிறது. பின், அது சூடாக்கப்பட்ட இரும்பு உருளைகளுக்கிடையே செலுத்தப்படுகிறது. இதனால் கூழ் உலர்ந்து தாளாகிறது. பா. sizing (வேதி)

papilla - அரும்புகள்: தோலில், சிறப்பாக விரல்முனையில் காணப்படும் காம்பு போன்ற நீட்சிகள். மொட்டுகள் என்றுங் கூறலாம். (உயி)

pappus - மயிர்க்குஞ்சம்: இது உருவில் மாற்றமடைந்த புல்லி விட்டம். நேர்த்தியான மயிரிழைகள் விதைக்கு மேல் வளர்ந்து குதிகுடைபோல் இருக்கும். காற்றினால் பரவும் விதைகளில் இவ்வமைப்பு காணப்படும். எ-டு.எருக்கு (உயி)

parabiosis - பக்கப் புணர்ச்சி, மருங்கிணைவு: உட்கருக்கள் பக்கத்தில் இணைதல் இரு தனி உயிர்களுக்கிடையே இணைப்பு ஏற்பட்டு, உடல் நீர்மங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் கலத்தல். இது இயற்கையாகவும் ஆய்வு நிலையிலும் நடைபெறுவது ஆய்வு நிலையில் பூச்சிகளில் செய்யப்பெறுவது. இயற்கை நிலை சியாமிய இரட்டையர்களில் நடைபெறுவது. இதனை மருங்குப் புணர்ச்சி என்றுங் கூறலாம். (உயி)

parachute - குதிகுடை: 1. குடை போன்ற அமைப்பு, வானவூர்திகளிலிருந்து பாதுகாப்பாகத் தரையில் இறங்கப் பயன்படுவது. பயிற்சியாளர்கள் அல்லது போர் வீரர்கள் பயன்படுத்துவது. 2. வாணவெளிக்கலம் காற்றுவெளி வழியாக மீளும்பொழுது தரையை அடையவும் செவ்வாய் முதலிய கோள்களில் கருவிகள் இறங்கவும் பயன்படுவது. (இய)

para compound - பதிலீட்டு சேர்மம்: பென்சின் வளையத்தில் இரு கார்பன் அணுக்களோடு இணைந்த பதிலீட்டு அணுக்கள்