பக்கம்:அறிவியல் அகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

реа

317

pel


வளைகுடாவிலும் நடைபெறுவது (உயி).

peat-1. சிதைகுவியல் அரைகுறையாகச் சிதையும் தாவரப் பொருளின் குவியல். 2. இளம் நிலக்கரி தாவரப் பொருளிலிருந்து நிலக்கரி தோன்றுவதின் தொடக்க நிலை. எரிபொருள். (ப.து)

pectoral fins-மார்புத் துடுப்புகள்: மீனின் முன்புறத்துடுப்புகள். ஒ. pelvic fins. (உயி)

pectoral girdle - தோள் வளையம்: முதுகெலும்பி உடலின் முன் பகுதியிலுள்ள எலும்பு அமைப்பு. இதில் கைகள் இணைந்துள்ளன. இதில் இருகாறை எலும்புகளும் இரு தோள் எலும்புகளும் உண்டு. காறை எலும்புகள் மார்பெலும்போடும் தோள்பட்டை எலும்புகள் முதுகெலும்போடும் பொருந்தி இருக்கும். ஒ. pelvic girdle. (உயி).

pectose - பெக்டோஸ்: பெக்டின் தரும் பொருள். காய்களின் சதையில் உள்ளது. (உயி)

pedicel-பூக்காம்பு: கனி அல்லது பூவைத் தாங்குவது. மெல்லியதும் நீண்டதும் உருண்டதுமான பசுமையான நீட்சி. (உயி)

pedicle - அரை: 1. சிலந்திகளில் தலை-மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலுள்ள பகுதி, 2. சிறுகாம்பு. (உயி).

pedipalps-பேரிடுக்கிகள்: சிலந்தி உயிரிகளின் தலையில் நான்காம் துண்டத்திலுள்ள ஓரிணை ஒட்டுறுப்புகள் உணர்தல் இவற்றின் வேலை. அதாவது உணரிகளின் வேலையைச் செய்கின்றன. தேள்களில் பற்றப் பயன்படுதல். (உயி).

pedology - மண்ணியல்: மண் தோற்றம், இயல்பு, பயன் முதலியவற்றை ஆராயுந்துறை. வேளாணியல் சார்ந்தது. (உயி).

peduncle - பூக்கொத்துக்கொம்பு: பூக்கொத்தின் முதல்காம்பு. இதில் தனிப்பூக்கள் பூவடிச் செதில் கோளங்களில் உண்டாகின்றன. இதன் வடிவம், அளவு ஆகியவை பூக்கொத்து வகைக்குத் தகுந்தவாறு வேறுபடும். (உயி).

pelagic organisms- கடல்மிதவை வாழ்விகள்: மேற்பரப்பு நீர்கள் அல்லது கடலின் நடு ஆழப் பகுதியில் வாழ்பவை. இவை மிதப்பிகள் (பிளாங்டான்) நீந்திகள் (நெக்டான்) என இரு வகைப்படும்.(உயி).

pelvic fins - இடுப்புத்துடுப்புகள்: மீனின் பின்புறத்துடுப்புகள். (உயி).

pelvic girdle-இடுப்பு வளையம் : முதுகெலும்பி உடலின் பின் பகுதியிலுள்ள விறைப்பான எலும்பமைப்பு. இதில் கால்கள் இணைந்துள்ளன. இதில் இடுப்பு முன் எலும்பு, இடுப்பு மேல் எலும்பு ஆகியவை உள்ளன. ஒ. pectoral girdle. (உயி)