பக்கம்:அறிவியல் அகராதி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pet

323

pha


வது. இது பண்படா எண்ணெய் ஆகும். வடித்துப் பகுத்தல் மூலம் இதிலிருந்து கிடைக்கும் பொருள்களாவன. டீசல் எண்ணெய், மண்ணெண்ணெய், கேசோலின், துய்மையாக்கிய வளி. தவிர, உயவிடு எண்ணெய்களும் வெண் மெழுகும் எஞ்சு பொருளிலிருந்து கிடைக்கின்றன. இதிலிருந்து கிடைக்கும் கரும்பொருள் நீலக்கீல் தார் ஆகும். (வேதி,

Petrology - பாறைஇயல்: பாறைகளை ஆராயும் புவி அறிவியல் துறையின் ஒரு பிரிவு. (பு:அறி).

Pewter - பியூட்டர்: வெள்ளீயம், காரீயம், ஆண்டிமனி சேர்ந்த உலோகக் கலவை. ஆண்டிமனியைச் சேர்க்க கடினமாகும். செம்பைச் சேர்க்க மென்மையாகும். அழகுபடுத்தும் வேலைகளில் பயன்படுதல். (வேதி)

Pfizerlaw - பிபிட்சர் விதி: அடுத்தடுத்த தலைமுறைகளில் உயிரணுக்கள் படிப்படியாகச் சிறியவையாகின்றன என்பது விதி. (உயி)

PH-பிஎச்: PH=log10H+.ஒரு கரைசலிலுள்ள அய்டிரஜன் அயனிச் செறிவின் பத்தடிமானுள்ள எதிர் மடக்கையே பிஎச் எனப்படும். ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித்தன்மையையோ காட்டுவது. பி.எச்7க்குக் கீழிருந்தால் காடித்தன்மை 7க்கு மேலிருந்தால் காரத்தன்மை. பிஎச் மதிப்புகளைத் தோராயமாக நிலைக்காட்டிகளைக் கொண்டு பெறலாம். மின்வாய்த் தொகுதி களைப் பயன்படுத்தித் துல்லிய மாகக் காணலாம். பா. buffer solution (வேதி)

pH meter -பிஎச் (மீட்டர்) மானி: ஒரு கரைசல் அல்லது ஊடகத்தின் பிஎச்சைக் கண்டறியப் பயன்படுங் கருவி. (வேதி)

Phage, bactiniophage -குச்சிய விழுங்கி: குச்சியங்களைத் தொற்றும் நச்சியம். (உயி)

Phagocytes -விழுங்கணுக்கள்: ஒருவகைக் குருதி வெள்ளணுக்கள். தீங்கு தரும் வெளிப்பொருள்களையும் குச்சியங்களையும் விழுங்கிச் செரிக்க வைப்பவை (வேதி)

Phagocytosis -விழுங்கணு வளைப்பு: உணவுத்துகள்களை விழுங்கணுக்கள் சூழ்ந்து வளைத்துக் கொள்ளுதல் (உயி)

Phalanges -விரல் எலும்புகள்: கோல்வடிவ எலும்புகள். கை விரல்களிலும் கால் விரல்களிலும் உள்ளவை.(உயி)

Phanerogams -பூக்குந்தாவரங்கள்: தாவர உலகின் பெரும்பிரிவு. இதில் உறையில் விதையுள்ள தாவரங்களும் உறையில் விதையில்லாத தாவரங்களும அடங்கும். பூவரசு முன்னவைக்கும் சைக்கஸ் பின்னவைக்கும் எடுத்துக்காட்டுகள். (உயி)

Phanerozoic-பூக்குந்தாவர ஊழி: முன் கேம்பிரியன் ஊழி முடிந்த பின் உள்ள காலம் அறிந்தறியக் கூடிய தொல்படிவுகளைப் பாறை-