பக்கம்:அறிவியல் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apo

31

aqua


திங்களுக்கு அனுப்பிய அமெரிக்க வானவெளிக்கப்பல் (1968-1972) அப்பல்லோ திட்டத்தில் நடைபெற்றது. (வா.வெ.அறி)

apomorphine - அபோமார்பின்: C17H17NO2. மார்பைனிலிருந்து பெறப்படும் படிக வடிவக் கராமம். வலி நீக்கி. (வேதி)

apparatus - ஆய்கருவி: ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பயன்படும் கருவி. (இய)

appendage - ஒட்டுறுப்பு: இணையுறுப்பாக உள்ள புற உறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வரக்காரணம். (உயி)

appendix - குடல் வால்: பெருங்குடலில் குடல் பையின் கீழ் முனையிலுள்ள விரல் போன்ற உறுப்புக்குக் குடல் வால் என்று பெயர். இது பயனற்ற உறுப்பு. இது நோயுற்று வீங்குதலைக் குடல் வால் அழற்சி என்கிறோம். (உயி)

Apple - ஆப்பிள்: இந்தியச் செய்தித் தொடர்பு நிலா. (இய)

appliance efficiency - கருவி பயனுதிறன்: பா. efficiency. (தொ.நு)

application - பயன்பாடு: ஒன்று நம் வாழ்வில் நாள்தோறும் பயன்படுவதைக் குறிப்பது. இது நெறிமுறையாகவோ கருவியாகவோ இருக்கலாம். எ-டு. காற்றழுத்தத்தால் எழுதுகோல் எழுதுதல். செயற்கை நிலா வானிலை முன்னறிவிப்பிற்கும் செய்தித் தொடர்புக்கும் பயன்படுதல். (தொ.நு)

application programme - பயன்பாட்டு நிகழ்வரை. (தொ.நு)

application programmer - பயன்பாட்டு நிகழ்நிரல் நிரலர். (தொ.நு)

applications software - பயன்பாட்டு மென்பொருள், மென்னியம்: உயர்நிலை மென்பொருள். எ-டு. இருப்புக்கணக்குக் கட்டுப்பாடு. (தொ.நு)

applied science - பயன்படு அறிவியல்: நெறிமுறையை வாழ்க்கையில் பயன்படுத்துவது - மருத்துவம், பொறிஇயல். ஒ. basic science.

aprotic solvent - முன்னணு ஏற்காக் கரைப்பான்: முன்னணு அளிக்காத கரைப்பான். (வேதி)

apsides - வல வழி நிலைகள்: வானியல் சுற்று வழியிலுள்ள இரு நிலைகள். ஒன்று ஈர்ப்பு மையத்திற்கு அருகிலும் மற்றொன்று அதிலிருந்து விலகியும் இருத்தல். (வானி)

aqua fortis - வெடிகாடி: நைட்டிரிகக் காடி HNO3. (வேதி)

aquations - நீர்ம அயனிகள்: நீரியக் கரைசலிலுள்ள நீர்நிலை கொண்ட உலோக அயனிகள். (வேதி)