பக்கம்:அறிவியல் அகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phy

330

pia


phylogeny - இனவளர்ச்சி: உயிர்த் தொகுதியின் உயிர்மலர்ச்சி வரலாறு. ஒ. ontogeny. (உயி)

phylum - பெரும்பிரிவு: விலங்குலகம் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பெருந்தொகுதிகளில் ஒன்று. துணை விலங்குலகங்களான முதல் தோன்றிகளும் (புரோட்டோசோவா) துணைத் தோன்றிகளும் (பாரசோவா) தத்தமக்கென்று முறையே ஒரு பெரும் பிரிவைக் கொண்டவை. அவை முதல் தோன்றிகளும் துளையுடலிகளும் (பொரிபெரா) ஆகும். இவ்விரண்டு உள்ளுலகங்களைத் தவிர மூன்றாம் உள் உலகமும் உண்டு. அது பின் தோன்றிகள் (மெட்டசோவா) பிரிவைச் சார்ந்தது. எஞ்சியுள்ள 11 பெரும் பிரிவுகளும் இதில் அடங்கும். பெரும் பிரிவுகள் உட்பெரும் பிரிவுகளைக் கொண்டது. முதுகுத்தண்டு உடையன (கார்டேட்டா), மண்டை ஓட்டின. மண்டை ஓடு இல்லாதன என்னும் இரு உட்பெரும் பிரிவுகளைக் கொண்டவை. (உயி)

physical change - இயற்பியல் மாற்றம்: பா. change, physical (வேதி)

physical chemistry - இயற்பியல் வேதியியல்: வேதிப்பண்புகளைத் தொடரும் இயல்புமாற்றங்களை ஆராயுந்துறை. அதாவது, இயற்பண்புகள் வேதிப்பண்புகளைச் சார்ந்தவை. வேதியியலின் ஒரு பிரிவு. (வேதி)

physics - இயற்பியல்: பருப்பொருளின் பண்புகள், ஆற்றல் முதலியவற்றை ஆராயுந்துறை. ஓர் அடிப்படை அறிவியல், அளவியல், ஒளியியல், இயக்கவியல் எனப் பல பிரிவுகளைக் கொண்டது.

physiology - உடல்: உடலிலுள்ள உறுப்புகள் அவை செய்யும் வேலைகள் ஆகியவற்றை ஆராயுந்துறை. இது மனித, உடலியல், விலங்கு உடலியல், தாவர உடலியல் என மூன்று வகைப்படும். உயிரியலின் ஒரு பிரிவு. உடல் செயலியல் என்றுங் கூறலாம்.

physiotherapy - உடற்பண்டுவம்: மருந்துகள் தவிரப் பயிற்சி, நீவுதல் முதலியவற்றினால் நோய் நீக்கும் முறை. மருத்துவஞ் சார்ந்தது.

physique - உடற்கட்டு: உடலின் அமைப்பு, வலு, தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பது. (உயி)

pi-பை: π. வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் குறுக்களவுக்குமுள்ள தகவிற்குரிய குறி. (3.14159 அல்லது 22/7 (இய)

pia - இளஞ்சிலந்திப்படலம்: உள்ளச்சின் (எண்டோரேகிஸ்) உட்குழாய்ப் படலம். பறவைகள், ஊர்வன, இருநிலை வாழ்விகள் ஆகியவற்றில் காணப்படுவது. (உயி)

piamater - குழாய்ப்படலம்: தண்டு வடத்தையும் மூளையையும் மூடியுள்ள மெல்லிய உட்படலம். (உயி)