பக்கம்:அறிவியல் அகராதி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plt

332

pla


டது. பூவின் பெண்பகுதி (உயி)

pit-குழி: இரண்டாம் நிலைக்கண்ணறையிலுள்ள இடைவெளி. தடிப்புற்ற கண்ணறைகளுக் கிடையே தொடர்பை உண்டாக்குவது கடத்திகள். (உயி)

pitch - 1. குரல் எடுப்பு: ஸ்தாயி: ஒலியின் உணர்வு தாழ்வு. 2. புரி: திருகிலுள்ள மரை, 3. கீல் : நிலக் கரித்தாரைக் காய்ச்சி வடிக்கக் கிடைக்கும் எஞ்சுபொருள். (பது)

pitch blende - பிட்சி பினண்டு: யுரேனினைட்டு. யுரேனியம் ஆக்சைடை முதன்மையாகக் கொண்டது. ரேடியத்தின் முதன்மையான மூலம் (வேதி)

pitcher plant - குடப்பைத் தாவரம்: பூச்சி உண்ணுந்தாவரம். இந்தியாவில் ஒரே ஒரு வகை மட்டும் உண்டு. இலைப்பரப்பு குடப்பையாக மாறியுள்ளது. இலைக்காம்பு பையைத் தாங்குவது. இதன் நீளம் 10 - 15 செ.மீ. பைச்சுரப்பிகள் சுரக்கும் டிரிப்சின் பிடிக்கும் இரையைக் கரையச் செய்கிறது. கரைந்த பகுதிகள் உட்கொள்ளப்படுகின்றன. கரையாதவை பையில் கழிவாகத் தங்குகின்றன. எ-டு. நெபன்தஸ் (உயி)

pith - சோறு: தாவரத் தண்டின் மையத்திலுள்ள பஞ்சுத்திசுப் பகுதி, பூண்டுத் தாவர வேர்ப் பகுதியிலும் உண்டு. (உயி)

pitottube - பைடட் குழாய்: பாய்ம விரைவை அளக்க உதவுங் கருவியமைப்பு. (இய)

pituitary body, gland - மூளையடிச் சுரப்பி: முளைக்கு அடியுள்ள நாளமிலா உட்சுரப்பி. துண்டிகளையும் புரதங்களையும் சுரத்தல். எலும்பு வளர்ச்சியையும் கட்டப்படுத்தல். இதன் பிட்யூட்டரின் என்னும சுரப்பு குருதி அழுத்தத்தை உயர்த்துகிறது. இச்சுரப்பி நாளமிலாச் சுரப்பி மண்டலத்தின் தலைமைச் சுரப்பி. (உயி)

pK - பிகே: (log10,(1/K) பத்தின் அடி மானமுள்ள காடியின் பிரிகை மாறியின் எதிர் மடக்கையே என்பது. (வேதி. ஒ.pH

pKvalue-பிகே மதிப்பு: மடக்கை அளவில் ஒரு காடி வலுவின் அளவு. வேறுபட்ட காடிகளின் வலுக்களை ஒப்பிடப் பயன்படுவது. (வேதி)

placenta - 1. சூல்கொடி: நஞ்சுக் கொடி வளரும் கருவைக் கருப்பையோடு இணைத்து ஊட்டம் வழங்குங்கொடி, 2. சூலொட்டு: சூல்கள் உள்ள ஒட்டுப்பகுதி. பா. umbilical cord. (உயி)

placentation - சூலமைவு: சூல்பையின் தடித்த பகுதிகளுக்குச் சூலொட்டுகள் என்று பெயர். இவற்றில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு என்று பெயர். இது பலவகை. (உயி)

placoid scale, denticle - தட்டைச் செதில்: பல் போன்ற சிறிய உறுப்பு. குருத்தெலும்பு மீன்களின் தோலில் உள்ளது. சுறா. (உயி)